உன் அருமையை மறந்தோம்.. மரங்கள்!
Apr 06, 2026,10:41 AM IST
- மு. பாரதி
உன்னை நேசித்தோம்
பாதுகாவலானாய்
பணத்திற்கும்
இடத்திற்கும்
உன்
அருமையை
மறந்தோம்
சோலைவனம்
பாலைவனம்
ஆனது
ஆடம்பரத்தை
நாடினோம்
இயற்கையை
மறந்தோம்
விலை மதிப்பில்லாத
வளியை
இழந்து
வலியை
அழைத்து
சுவாசத்திற்கு
திணறுகிறோம்
நேசிப்போம்
மரங்களை
சுவாசிப்போம்
இயற்கையை
எடுத்துரைப்போம்
பயனை
ஒன்றுபடுவோம்
உறுதியேற்போம்
புவியை
காப்போம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம், சென்னை-64,
செங்கல்பட்டு மாவட்டம்)