நீரில்லை நீயில்லை... நீரின்றி உயிர் இல்லை !

Apr 06, 2026,10:38 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


நீரில்லை நீயில்லை...

நீரின்றி உயிர் இல்லை 

உலகில்லை......


நீரின்‌ மகத்துவத்திற்கு எல்லையில்லை...


மனிதனே...

நீ அதைப் புரிந்து நடந்தால் ...


நீருக்கோ பஞ்சமில்லை....


மரம் நட்டால் மழை வருமே...


உயிர்க்கோளம் பிழைத்திடுமே.,..


மறந்தால்... வேற்றுக்கிரகம் வேண்டும் நிலை...


உன் சந்ததிக்கு ஏற்படுமே...


இயற்கை கொடுத்த வரத்தினை....




இயன்ற அளவு காத்திடு...


நெகிழி தவிர்த்து... நிலத்தடி நீர் உயர்த்தி...

நல்வாழ்வுக்கு வித்திடு...


நீரின்றி அமையாது உலகு....


மனம் வெறுத்த நிலையிலும் 

மழை சத்தம் அதை மாற்றுமே....


வாழ்வே மாயம் என்றவனின்

காயம் கூட...


ஆற்று நீரைப் பார்க்கும் போதும்...


ஆழிக் கரையில் அமரும் போதும்....


கொட்டும் அருவியில் குளிக்கும் போதும்....


காயம் காற்றில் கரையுமே....


மாயமாகி மறையுமே...


வாழ்வில் வசந்தம் மலருமே....


நீர் நிலையைக் காப்போமே....


நீரும் வாழ்வும் நிலைபெற....


நீரும் வாழ்வும் நிலைபெற....


நீர் நிலையைக் காப்போமே....


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்