- ந. தீபலட்சுமி
"மிஸ்... மிஸ்..."
"குட் மார்னிங் மிஸ்..."
தன்னுடைய யூனிஃபார்ம் பாக்கட்டில் கை வைத்துக் கொண்டே அழகாக புன்முறுவல் செய்தாள் யோகஸ்ரீ.
ஒன்பதாம் வகுப்பு மாணவி.
அப்பழுக்கில்லாத முகம்.
எப்பொழுதும் உதட்டோரம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு புன்னகை.

எதையாவது சொல்ல வேண்டும் என்றால் நெளிந்து, வளைந்து, தலையை சாய்த்து ஒரு சின்ன சிரிப்புடன் அவள் சொல்லும் விதமே கொள்ளை அழகு தான்.
"குட் மார்னிங் யோகஸ்ரீ. என்ன ஒரு மாதிரி சிரிக்கிறாயே?" எனக் கேட்டு நானும் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.
"மிஸ்ஸ்ஸ்ஸ்......" என இன்னும் இழுத்தாள்.
"அடடடா...... சொல்லுமா, என்ன விஷயம்? கிராமர் ஏதும் தெரியலையா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை மிஸ்."
" ம்ம்.....பின்ன என்ன? சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லுமா எனக்கு வேற வகுப்புக்கு போகணும் இல்ல..." என நான் கேட்டவுடன்,
"மிஸ்.... நீங்க வெள்ளிக்கிழமை பாடம் நடத்துனீங்க இல்ல? இப்போ பார்த்தோமே மிஸ் அந்த லெசன் தான்..."
"ஆமாம்.I CAN'T CLIMB TREES ANYMORE. அதுதான் இன்றைக்கு முடிஞ்சாச்சே. அதில் ஏதேனும் டவுட் இருக்கா?" என்றேன்.
ஏனெனில் அதில் கொஞ்சம் புதிய வார்த்தைகள் இருந்ததால் மாணவர்களுக்கு புரியும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு சொல்ல வேண்டியதாக இருந்தது.
TRAPEZE, GALLANTRY AWARDS போன்ற வார்த்தைகளை விளக்க வீடியோக்களை காட்ட வேண்டியதாக இருந்தது.
"நான் சனிக்கிழமை என்னோட பாட்டி வீட்டுக்கு போயிருந்தேன் மிஸ்"
"ஓ!... அப்படியா.... பாட்டி நல்லா இருக்காங்களா ?..."என நான் கொஞ்சம் கிண்டலாக கேட்டதை புரிந்து கொண்ட அவள்
"ஐயோ மிஸ் அவங்க நல்லா இருக்காங்க..."
"ஓ.... உன்னோட சின்ன வயசு ஞாபகம் வந்துருச்சா"
"எஸ் மிஸ்... நிறைய....ம்ம்... அது மட்டும் இல்ல மிஸ்...."
"சரி...அப்புறம் என்ன?"
"நான் அங்க ஒண்ணு பார்த்தேன் மிஸ்"என அவள் திரும்பவும் பீடிகை போட்டதும் அனைத்து மாணவர்களும் 'கொல்' என சிரித்தனர்.
"என்னடி பாத்த..? சீக்கிரம் சொல்லு. பெல் அடிக்க போறாங்க. நீ சொல்றதுக்குள்ள எங்களுக்கு மயக்கமே வந்துரும் போல! என அவள் தோழிகள் கிண்டல் அடித்து சிரிக்க...
என்னடா நடக்குது இங்க என்பது போல் அசடு வழிய சிரித்து வைத்த மாணவர்கள்....
ஹ...ஹ...ஹா... அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
தயங்கி தயங்கி ஒரு வழியாக அவள் பாக்கட்டில் இருந்து எதையோ எடுத்து கைகளில் வைத்து தலையை சாய்த்து என்னை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள்.

கைநிறைய ...காகிதப் பூக்கள்...
ஆம்... காகிதப் பூக்கள்...
இரு கைகளிலும் அதனை வைத்துக் கொண்டு கண்களில் மின்னல் தோன்றியது போல் பளிச் என கண்களை விரித்து....
"இதுதானே மிஸ் நீங்க சொன்ன போகன் வில்லா....?"
நான் அப்படியே சிலையாக நின்றேன்.என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் மெல்ல எட்டிப் பார்த்தது.
ஏன் என்று சொல்லுங்களேன்....?
(ந. தீபலட்சுமி, ஆங்கில ஆசிரியர் ஆசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}