சப்தமற்ற மழை.. மூவரி கவிதைகள்!

Jul 13, 2026,02:25 PM IST
- சசிகலா விஸ்வநாதன்

சப்தமற்ற மழை.. எழுத்தாளர் சசிகலா விஸ்வநாதன் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட மூவரி கவிதைகள்

(1)

சப்தமற்ற மழை 
ஒளியற்ற இரவு 
தனிமையின் வலிமை கொடுமை

(2)

மழையின் ஈரிப்பு 
தழைகளின் வாசம்
புழுக்களின் உல்லாசம்



(3) 

கோடை மழை  குளுமை
வாடைக் காற்றின் சிலிர்ப்பு
சாடையில் அவளின் அழைப்பு 

(4)

செருப்பில் ஒட்டிய மண் 
மனதில் ஒட்டிய
பெண்ணின் காதல்

(5)

மழையில் அழுகும் கனிகள்
அழுகிப் புதையும் கொட்டைகள் 
நாளை முளைக்கும் தருக்கள் 

(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்