உனக்கு ஒன்று என்றால்!

Jul 13, 2026,03:36 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நான் இருமினால்

அது 

ஒன்றுமில்லை!


ஆனால் 

நீ இருமினால்

என் நெஞ்சம் வலிக்கிறது!


எனக்கு உடல்நலம் 

சரி இல்லை எனில்

அது சாதாரணம்!




ஆனால் உனக்கு ஒன்று என்றால் 

அது என் மனதுக்குப் 

பெரும் ரணம்!


எனக்கு ஒன்று என்றால் 

என் கண்களில் 

கண்ணீர் கசியும்!


அதுவே உனக்கு ஒன்று 

என்றால் எனது

நெஞ்சில்  உதிரம் வழியும்!


எனக்கு ஒன்றென்றால் 

மருத்துவமனைக்குச் 

செல்வேன்!


ஆனால் உனக்கெனில்

கோயில் கோயிலாகத்

தவம் இருப்பேன்!


எனக்கு ஒன்று என்றால் 

அதனைத் தூக்கத்தில் 

மறப்பேன்! 


உனக்கு ஒன்று என்றால் 

எனது தூக்கத்தையேத்

துறப்பேன்!


என்னவளே! நீ

எப்போதும் நன்றாக 

இருக்க வேண்டும்! 


இறைவா! அதற்கு 

நான் என்ன 

செய்ய வேண்டும்? 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்