தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை.. கண்ணீரில் உறைய வைத்த நாள்!
Dec 26, 2025,04:31 PM IST
- கலைவாணி ராமு
சுனாமி தினம்
இந்நாளை நினைத்தாலே
கனக்கிறது மனமே.....
அன்று உதிர்ந்ததோ
பல உயிரே....
அமைதியிழந்து
கடலே....
பொங்கியது
மேலே...
கனவுகள்
எல்லாம்
கலைந்தது....
நினைவுகள் எல்லாம்
உறைந்தது....
காலம் கடந்தும்
அந்த நாளை
நினைக்கும் போது..
மனம் அந்த கடலை விட கொந்தளிக்கிறது......
கானாத காயங்களை
தந்து அந்த நாள்...
கலையாத
சோகங்கள் தந்த அந்த நாளில்....
அப்பாவி மக்களிடம்
கடல் தன்
அரக்க தன்மையை காட்டியது...
கடலுக்கு கண்டனம் காட்டிய நாள்....
தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை
உன்னை நண்பனாய் நினைத்து விளையாட வந்த
எங்களின் உறவுகளின் விதியில் விளையாடி விட்டாய் ...
அன்று மறைந்த உறவுகளின் விதியில் சதி செய்தவன் நீ....
தீரா வலிகளுடன் நாங்கள்