சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த தலைவர்: எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து!

Meenakshi
Jan 17, 2026,01:38 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில்  வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத்தின் தலைவருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,




தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக பலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.