சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரச்சார பணிகளை கவனிப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

1. N.ஆனந்த்
2. ஆதவ் அர்ஜுனா B.A.
3. K.A.செங்கோட்டையன்
4. A.பார்த்திபன்
5. B.ராஜ்குமார் DME
6. K.V.விஜய் தாமு
7. S.P.செல்வம் DCE
8. திருமதி K.பிச்சைரத்தினம் கரிகாலன்9. M.செரவு மைதின் (எ) நியாஸ்
10. திருமதி J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.
மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தவெக.,வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு 12 பேர் கொண்ட குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரச்சாரத்திற்கான குழுவையும் அமைத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்லுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இதுவரை கூட்டணி அமைத்து போட்டியிட போகிறார்களா அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி தவெக சார்பில் எந்த முடிவும் அறிவிக்கவில்லை. அப்படி ஒருவேளை கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி என்றும் சொல்லவில்லை. அதே போல் தமிழக சட்டசபை தேர்தலில் தவெக எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமாக வந்தால் கூட, சின்னம் என்ன என்பதை அறிவித்து, அதை இப்போதே மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை தவெக துவக்கி இருக்க வேண்டும். இப்படி அடிப்படையான தேர்தல் பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் பிரச்சாரத்திற்கு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு என விஜய் அமைத்து வருவது பலரையும் குழப்பமடைய வைத்துள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
வெங்கிரணங்களால் உலகோரை.. ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான் சூரியன்!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்
பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!
மாட்டுப் பொங்கலோடு திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்துக் கொண்டாடுவோம்!
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தங்கம் விலை இன்று சற்று குறைவு
அடி ஆத்தாடி.. மனதைக் கொள்ளை கொண்ட ஜெனீபர் டீச்சர் .. A rewind!
{{comments.comment}}