TVK needs 117: தவெக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 அல்ல.. 117!
சென்னை: தவெக ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை பலத்தின் எண்ணிக்கை 118 என்று எல்லோரும் சொல்லி வருகிறோம். ஆனால் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வர் பதவியேற்பதற்கு முன்பு ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி நடக்கும்போது உறுப்பினர் எண்ணிக்கை 233 ஆக குறையும்..எனவே பெரும்பான்மை பலமும் 117 ஆக குறையும்.
இருப்பினும் அப்படிப் பார்த்தாலும் இன்னொரு சிக்கலும் உள்ளது. அதாவது சபாநாயகர் தேர்வு உள்ளது. சபாநாயகராக தேர்வாகும் உறுப்பினர், கட்சி சார்பற்றவராகி விடுவார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தேவைப்பட்டால் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும். அதாவது சம நிலை ஏற்படும் சூழல் வரும்போது சபாநாயகர் வாக்களிக்கலாம்.
எனவே பெரும்பான்மைக்கு 10 பேர் தேவை என்ற நிலை மாறி குறைந்தது 11 பேரின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படும்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 117 இடங்களை எட்ட தவெக தற்போது மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.