திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

Meenakshi
Nov 01, 2025,03:48 PM IST

சென்னை: மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.


கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்து வந்தார் தவெக தலைவர் விஜய். அதன்பின்னர் கரூர் மக்களை நேரில் சென்று பார்க்க அனுமதி கிடைக்காததினால், பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர்  தனது கட்சிப்பணிகளை மீட்டும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.




இந்நிலையில், தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!


மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!


தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!


இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.