தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்

Oct 29, 2025,05:49 PM IST

சென்னை: எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. தவெகவில் யாரிடமும் தொய்வு ஏற்படவில்லை. இதனைவிட பெரிய நெருக்கடியையும் சந்திப்போம் என்று தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.


தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது இடிபாடுகளில் சிக்கி 41 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக விஜய் கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் கரூர் சம்பவத்தாங் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் தவெக கட்சியின் கட்சிப்பணிகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. நேற்று மாலை விஜய் அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.




சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அலோசனை கூட்டம் நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தவெகவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், 


முதலில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பணிகள், அடுத்த நிகழ்வுகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த வாரமே உயர்நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காகவே இன்னும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படாமல் இருக்கிறது. எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தோம். இதன்பின் 10 நாட்களுக்குள் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்க அறிவுறுத்தி இருக்கிறது. 


வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு வந்த பின் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எங்களுக்கான தடைகள், பிரச்சனைகள் என்னென்ன என்பது அனைவருக்கும் தெரியும். தவெகவை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள். மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களுக்கு 41 பேர் பலியானது மட்டுமே ஒரே துக்கம். மீள முடியாத துக்கம். எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. தவெகவில் யாரிடமும் தொய்வு ஏற்படவில்லை. இதனைவிட பெரிய நெருக்கடியையும் சந்திப்போம். 


கரூர் சம்பவத்திற்கு பிறகு அடுத்த நாளிலேயே நாங்கள் மீண்டும் கரூர் செல்ல முயற்சித்தோம். இரவு 3.30 மணி வரை காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதன்பின் அனைத்து சாலைகளும் தடை செய்யப்பட்டது. தவெக கொடி கட்டிய வாகனங்களை போலீசார் கரூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் அடித்து வெளியேற்றப்பட்டார்கள். அதன்பின் நடந்த நாடகத்தை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அமைச்சர்கள் நடத்திய நாடகத்தை பார்த்திருப்பீர்கள்.. உடனடியாக பிரேத பரிசோதனை செய்துவிட்டார்கள் என்று தெரிந்த பின், எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. ஏனென்றால் எங்களின் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீதுதான். அதனால் உடனடியாக நீதிமன்றத்தை நாடினோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்