சென்னை: தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது.
வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 18ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 19ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 20ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 21ம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 22ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை பிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியம் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}