ஒரு பார்வை.. இரு கவிதை!
Jan 03, 2026,11:34 AM IST
- பா.பானுமதி
மதுரையைச் சேர்ந்த ஆசிரியை பா. பானுமதி தீட்டிய இரு கவிதைகள்.. கவிதை குட்டியாக இருந்தாலும்.. கருத்து கெட்டியாக இருக்கும்.. நறுக்கென்று நாலு வரியில் நறுக்கு தெறித்தாற் போல நயமான கருத்துக்கள்.. படித்துப் பாருங்கள்.
செவிலியர்கள்
கோவிலில் பறக்கும்
வெண் புறாக்கள்
மருத்துவமனையில் பறக்கும்
பெண் புறாக்கள்
தாயின் நகல் தன்னலமற்ற
அகல் இல்லை
இரவு பகல் இடித்து விரட்டும்
இகல்
பயணம்
சிறகு முளைக்க வைக்கும்
சிந்தனைகளில் பறக்க வைக்கும்
புத்துணர்வு பெருகித்தெறிக்கும்
பூவாய் புன்னகை பிறக்கும்
ரசனைகள் மெல்ல விழிக்கும்
நேசம் நெஞ்சில் துளிர்க்கும்
ஓய்வை ஒய்யாரமாக்கும்
ஆய்வுக்கூட சிறிதாய் நடக்கும்
பயணங்களில் பங்கு கொள்
தோரணமாய் போட்டு அழைக்கும்
மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என
பழக்கப்படுத்திக் கொள்!