அதல பாதாளம்.. மேலிருந்து தண்ணீர்.. பலமாக வீசிய காற்று.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 5)
- உமாராணி சங்கரலிங்கம்
ஜூலை 4 ஆம் தேதி 2022
திங்கட்கிழமை.
அதிகாலை 3 மணிக்கு விழித்து எழுந்து 4.15 க்குக் கிளம்பிப் பெரிய bagகளை எல்லாம் lock பண்ணி பஸ்ஸில் வைத்து விட்டோம். எங்களைப் பஸ் stopஇல் இறக்கி விட்டு பஸ் சென்று விட்டது. 6பேர் அமரும் சிறிய வண்டிகள் தான் 16கி.மீ தூரத்தில் இருக்கும் சந்தன்வாடி என்ற இடத்திற்குச் செல்கின்றன. 6,6 பேராக ஏறி சந்தன்வாடிக்கு 6.30 க்கு அடைந்தோம். மலை மேலே தான் செல்ல வேண்டியதிருந்தது.
போகும் போது எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர் பையன் பெயர் இம்ரான். எங்கள் அனுமதியோடு பாதையின் ஓரத்தில் இருந்து நமாஸ் செய்ய ஆரம்பித்து விட்டான். எந்த மதமானால் என்ன, இறைவன் ஒருவனே என்ற எண்ணத்தில் நாங்கள் நமசிவாய மந்திரத்தைக் கூறி காப்புப் பாடல் பாடினோம். சந்தன்வாடியை அடைந்த பின் ஊன்றி நடக்க எல்லோரும் ஆளுக்கு ஒரு கம்பு வாங்கினோம். நிறையக் கூட்டம்.
எங்கு நோக்கினும் மனிதர்கள் தான். ஹர ஹர மஹாதேவா ,பம் பம் போலே நாமம் தான். வரிசையாக நின்று எல்லோருடைய permission letter ஐயும் check பண்ணி blue id இருக்கிறதா என்று பார்த்து உள்ளே அனுப்புகிறார்கள் இராணுவ அதிகாரிகள். உள்ளே நுழைந்ததும் லங்காவில் நிறைய கடைகள் இருந்தன. இட்லி,வடை சாம்பார் இருந்தன. அரை இட்லி,அரை வடை மட்டும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தோம்.
உயரமான மலை மேலே ஏறும் போது blood thick ஆகாமல் இருப்பதற்கு ஆளுக்கு அரை மாத்திரை எடுத்துக் கொள்ளுமாறு முருகராஜ் கொடுத்தார்கள். நாங்களும் அதை எடுத்துக் கொண்டோம். முதலில் நாம் போகும் இடம் 3கி மீ தூரத்தில் இருக்கும் பிஸூடாப் எனும் இடம். முதலில் சிறிது சமதளம் , பின் மலை செங்குத்தாக இருந்தது. கைகளில் கற்பூரத்தைக் கட்டிக் கொண்டோம்.
எனவே நாங்கள் பிஸூடாப் வரை குதிரையில் செல்ல தீர்மானித்தோம். என் குதிரையின் பெயர் பாதல். குதிரைக்காரன் பெயர் ஜாவிட். என் கணவரின் குதிரையின் பெயர் லீலா. ஒரு குதிரைக்கு 1050 ரூபாய் எனப் பேசி குதிரையில் ஏறிக்கொண்டோம். குதிரைக்காரனின் idஐ நம்மிடம் கொடுத்து விடுகிறார்கள். 7.15 க்குக் கிளம்பிய குதிரை 9 மணி அளவில் பிஸூடாப்பை அடைந்தது. போகும் போது குதிரையை உற்சாகப் படுத்திக் கொண்டே வருகிறான்.
நாங்களும் குதிரையை மிகவும் உற்சாகப்படுத்திக் கொண்டு , நமசிவாய மந்திரத்தைக் கூறிக் கொண்டே சென்றோம். தேளின் கொடுக்கு போல் மலை இருந்தது. மலையில் இருக்கும் கற்கள் மனித உடலில் இருக்கும் எலும்புகள் போல் இருக்கின்றன. மலை உச்சியை அடைந்ததும் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டோம். Medical camp அங்கே இருக்கின்றன .
oxygen cylinder , oxy meter, b.p. எல்லாம் check பண்ணுகிறார்கள். ஏறும் வழியில் இராணுவ அதிகாரிகள் மக்களுக்கு நிறைய உதவி செய்து நடந்து வருபவர்களுக்குக் கை தூக்கி விடுகிறார்கள். 11மணி வாக்கில் நடந்து வருபவர்களும் வந்து சேர சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்த லங்காவில் சிறிது சாப்பிட்டு விட்டு (நடக்க வேண்டுமல்லவா) நடக்க ஆரம்பித்து விட்டோம். நல்ல வெயில். குதிரையில் செல்பவர்கள் ஒருபுறம் செல்ல, குதிரையில் திரும்ப வருபவர்கள் வர டோலியில் தூக்கி செல்பவர்கள் செல்ல , நாங்களும் நடந்தோம். பயங்கர traffic. குதிரை வேறு செல்வதால் பயங்கர புழுதி. இவ்வளவு நேரமும் Mask போடாதவர்களும் போட்டுக் கொண்டோம்.
4 கி.மீ தூரத்தில் இருக்கும் ஜோஸ்பால் எனுமிடத்திற்கு வந்து சேர்ந்தோம் . தூரத்தில் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. 1.30 மணி அளவில் லங்காவில் சாப்பிடச் சென்றோம். சாப்பாடு, தோசை, ரொட்டி,Water melon தந்தார்கள். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் நிறைய ஜவான்கள். எங்களுக்கு boost up ஆன வார்த்தைகள் கூறி நடக்கச் சொன்னார்கள். நாங்கள் நடந்த செல்லும் போதே 2ஆட்களை 8 ஜவான்கள் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஆக்ஸிஜன் உருளையை மாட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த ஆட்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் திரும்பத் தூக்கிச் சென்றார்கள்.
இன்னும் சிறிது தூரம் நடந்து சென்ற பின் இறந்து போன ஒரு மனித உடலை 4ஜவான்கள் தூக்கிச் சென்றனர். செல்லும் வழியில் tent அமைத்து கடைகள் வைத்திருந்தார்கள். மிக உயரமான இடம். எல்லோரும் கைகளில் கட்டியிருந்த கற்பூரத்தை முகர்ந்து கொண்டே சென்றோம். அருமையான இடம். அங்கு டீ,பால் குடித்து விட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கிருந்து 2,3 மலைகளைக் கடந்து மேலே மலை ஏற்றம் வந்தது. டோலியில் திரும்ப வந்தவர்கள் விட்டு விட்டு காலியாகச் சென்றார்கள். எங்களை ஏறச் சொல்லிக் கேட்க நாங்கள் நாகக் கோட்டி என்ற இடம் வரை டோலியில் சென்றோம். நமது வலது புறம் அதல பாதாளம். மேலிருந்து தண்ணீர் வந்து, ஆற்றோட்டமாகச் செல்கிறது. டோலியில் தூக்கி செல்லும் நால்வரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள். காற்று பலமாக வீசியது.
இருபுறமும் பெரிய கம்பு வைத்து நடுவில் ஒரு நாற்காலி வைத்துக் கட்டியுள்ளனர். நாம் நமது bag ஐ முன்னால் வைத்துக் கொள்வதால் போட்டோ எதுவும் எடுக்க முடியவில்லை விடாமல் நமச்சிவாய மந்திரம் தான் கூறிக் கொண்டே சென்றோம். பத்திரமாக நம்மை இறக்கி விட்டவுடன் அவர்களை வணங்கினோம். அங்கு மத நல்லிணக்கத்தை நாம் காண முடிந்தது.
குதிரைக்காரர்கள், டோலி தூக்குபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். நாமோ சிவயாத்திரை செல்பவர்கள். மனித இனம் ஒன்றுதான். எல்லாம் ஏக இறைவன் தான். நம்மைப் பத்திரமாக அழைத்து வருவதில் அவர்கள் முழு கவனம் செலுத்துகிறார்கள். 4.45 க்கு நாகக் கோட்டி என்ற இடத்தை அடைந்தோம். எங்களுடன் வந்த அன்புமணி அண்ணாவும்,
தேவசேனாவும் முன்னால் சென்று விட்டார்கள். பின் அங்கிருந்து 4கி.மீ தூரத்தில் உள்ள சேஷ்நாக் என்ற இடத்தை அடைய குதிரையில் ஏறினோம்.
பயணம் தொடரும்.
அருட்பெருஞ்ஜோதி.
திருச்சிற்றம்பலம்.
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)