ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

May 02, 2026,05:02 PM IST

- உமாராணி சங்கரலிங்கம்


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


ஜூலை 3ஆம் தேதி,2022.

ஞாயிற்றுக்கிழமை.


காலை 5.30 மணிக்கு சூரிய க் கதிர்களின் சிறுவெளிச்சம். சிறு தூறல். மிக ரம்மியமான சூழ்நிலை. பஸ்ஸில் ஏறியதும் ஓம் நமசிவாய 3முறை கூறிவிட்டு காப்புப் பாடல் பாடினோம். பஸ் tunnel முன்பாக wait பண்ணியது. Convoy கிளம்ப 7.45 மணிக்கு கிளம்பினோம். 8 மணிக்கு காஷ்மீரில் நுழைந்து விட்டோம். 




Qazigund,Chaimullah, Anantnag  போகும் வழியில் இருந்த ஊர்கள் போகிற வழியில் நிறைய ஆப்பிள் தோட்டங்கள் இருந்தன. வானிலையும் நன்றாக இருந்தது. போகிற வழியில் உள்ள கடைகளில் freshஆக ஆப்பிள் juice  போட்டுத் தருகிறார்கள். அதைக் குடித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். பக்கத்திலேயே ராவி ஆறு ஓடுகிறது. பகல் 12.15க்கு Pahalgam என்ற ஊரின் நுழைவு வாசலிலே நமது எல்லா luggage களை எடுத்துக் கொண்டு queue வில் நிறுத்தி விடுகிறார்கள். அரசு நமக்குக் கொடுத்த permission letter காட்டச் சொல்கிறார்கள். 


நமது எல்லா reportகளையும் computer இல் ஏற்றி விட்டு, நமக்கு ஒரு நம்பர் கொடுத்து, blue colour id ஒன்று தருகிறார்கள். அதை எப்பொழுதும் கழுத்தில் போட்டு இருக்கச் சொல்கிறார்கள். நாம் அமர்நாத் செல்லும் பக்தர்கள் என்பதற்குச் சான்று அது தான். யாத்திரை முடியும் வரை நாம் அதை அணிந்து கொண்டு இருக்க வேண்டும் என்றார்கள். நமது luggage எல்லாவற்றையும் check பண்ணிய பிறகு திரும்பவும் பஸ்ஸில் ஏற்றி விட்டு சிறிது தூரத்தில் இருந்த லங்காவில் சாப்பிட்டோம். அதே ரொட்டி,பருப்பு,சாதம். எல்லோருக்கும் சாப்பாட்டின் அளவு குறைய ஆரம்பித்து விட்டது. அந்த taste நிறையப் பேருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உடம்பிற்குத் தெம்பு வேண்டும் என சாப்பிட்டார்கள். 


Pahalgam அழகான ஊர். சுற்றிலும் மலைகள். பத்ரி எனும் ஆறு. தண்ணீர் மிக  மிகக் குளிராக இருந்தது.. நிறைய போட்டோஸ் எடுத்துக் கொண்டோம். பின் ஏற்கனவே book பண்ணியிருந்த hotel க்குச் சென்றோம். 4 பேர் ஒரு அறையில் தங்கினோம். நாங்களும்,அன்புமணி அண்ணா, தேவசேனா ஒரு room இல் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த guest houseக்குப் பக்கத்தில் தான் ஆறு ஒடியது. அங்கு சென்று குளித்தோம். 




ஜில்லென இருந்தது. ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருந்தது. திரும்ப அறைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு 5மணிஅளவில் கிளம்பி நடந்தே அங்கிருந்த சிவன் கோவிலுக்குச் சென்றோம். நாங்கள் பார்த்ததில் அங்கு ஆண்களை விடப் பெண்கள் தான் நிறைய வேலை செய்கிறார்கள். அவர்கள் வளர்க்கும் குதிரைகளுக்குப் புல்கட்டு மற்ற பொருட்களையும் எடுத்து வருகிறார்கள்.  சிவன் கோவிலில் பூஜை சிறப்பாகச் செய்கிறார்கள். பூஜை முடிந்த பின் பாட்டு போட்டு நடனம் ஆடுகிறார்கள். நாங்களும் சிறிது நேரம் ஆடினோம். பின் அங்கு வரும் அனைவருக்கும் சாப்பாடு. 


யாரும் சாப்பாட்டை waste பண்ணக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளனர். அங்கு நாங்கள் ஜலந்திரில் இருந்து வந்து அங்கே தங்கியிருந்து service செய்யும் பெண்களைக் கண்டோம். அவர்கள் அங்கு ஒரு மாதம் தங்கியிருப்பார்களாம். நாங்கள் சாப்பிட்டு விட்டு hotelக்கு நடந்து வந்து ஒரு சிறிய meeting நடந்தது. அடுத்த நாள் தான் எங்கள் adventurous யாத்ராவின் முதல்நாள்.




பெரிய bag ஐ பஸ்ஸில் வைத்து விட்டு சிறிய backbag இல் 3 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியமானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அடுத்த நாள் 4.30 மணிக்குக் கிளம்ப வேண்டியதிருப்பதால் 3 மணிக்கு எழவேண்டும் என்று எல்லோரும் படுக்கச் சென்றோம். அடுத்த நாள் எப்படி இருக்கும் என எண்ணியவாறு படுக்கச் சென்றோம்.


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


(பயணம் தொடரும்)


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர்,  மன உளவியலாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்