அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
Aug 21, 2026,05:31 PM IST
- பாரதிராஜன்
தமிழ் திரை உலகில் துயரங்கள் தொடர்கின்றன. இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பிண்ணணி பாடகிகள் எஸ் ஜானகி, கே ஜமுனா ராணி ஆகியோரைத் தொடர்ந்து குணசித்திர நடிகை சவுகார் ஜானகி மறைந்துள்ளார்.
படிக்காத மேதையில் சிவாஜியுடன் நடித்த போது அவரின் முகத்தில் பொறுமை தெரியும். அவரே உயர்ந்த மனிதன் படத்தில் நடித்த போது அந்த பணக்காரத் தோரணை, சிவாஜி படத்தில் அவரை அடிப்பதை பெருமையாக ஏற்றுக் கொள்வார்.
இருகோடுகள் படத்தில் ஜெமினியுடன் நடித்த போது I talked about file not life. காவியத்தலைவி இரட்டை வேடத்தில் ஒருநாள் இரவு பாடலில் அருமையான நடிப்பு. நவராத்திரி விழா பாடலில் புன்னகை மன்னன் பாடல். புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இயக்குநகர் சிகரம் பாலச்சந்தர் படங்களான பாமாவிஜயத்தில் காஞ்சனா, ஜெயந்தி யுடன் பாடிய ஆணி முத்து பாடல் அதன்பிறகு நடிகையுடன் நட்பு வேண்டும் என்பதற்காக, பாலையாவின் வரவு எட்டணா பாடலில் நடிப்பு.
எதிர்நீச்சல் பட்டு மறக்க முடியாத ஒன்று. தெய்வம் படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த போது அந்த பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியான நடிப்பு. நீதி படத்தில் சிவாஜி, லாரி ஒட்டுநராக நடித்த வேஷத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி, விபத்தில் கணவனை இழந்த குடும்ப த்தில் நடித்த போது, சிவாஜியால் பாதிக்கப்பட்ட சவுகார் நடிப்பு பின்னணி எடுத்திருப்பார்.
பாபு படத்தில் சிவாஜி ரிக்ஷாக்காரர் வேஷம், பாலாஜி வீட்டில், சிவாஜிக்கு வைத்த வடையை ஸ்ரீதேவி எடுக்க, சிவாஜி திடுக்கிட, சவுகாரும்,பாலாஜியும் சிரிப்பார்கள். கொஞ்ச நாளில் சவுகார் விதவையை சிவாஜி காப்பாற்ற படம் பயங்கர ஹிட்.
ரஜனிகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்த தில்லுமுல்லுவில் டபுள் ஆக்ஷன் சூப்பரோ சூப்பர். தமிழ்த் திரையிலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார் என்பதே அவரது சிறந்த நடிப்புக்கு நல்ல உதாரணம்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)