கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!

Su.tha Arivalagan
Jan 24, 2026,03:41 PM IST

- வே.ஜெயந்தி


கையில் பலகை,

கண்களில் கனவு,


சிரிப்பில் நாளைய

இந்தியா தெரிகிறது.


பெண் குழந்தை

பாரமல்ல,


புது பாதை

போடும் வெளிச்சம்.




கல்வி அவளின்

அடையாளம்,


தன்னம்பிக்கை

அவளின் ஆயுதம்.


ஒரு பெண் உயர்ந்தால்

ஒரு வீடு அல்ல,


ஒரு நாடே

உயர்ந்து நிற்கும்.


பெண் குழந்தையை

காப்போம்


அவள் கனவுகளை

நனவாக்குவோம்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)