நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை!
Feb 13, 2026,12:43 PM IST
- வே. ஜெயந்தி
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை,
நேரம் சென்றாலும் அது நிழலாய் நிற்கும்.
சொல்லாத வார்த்தைகள் பல இருந்தாலும்,
சொந்தம் கொண்ட பாசம் என்றும் குறையாது.
சிரிப்பில் தொடங்கிய அந்த இணைப்பு,
சோதனைகளில் மேலும் வலுப்படும்.
தொலைவு வந்தாலும் தளராத பந்தம்,
தோளாக நின்று துணை நிற்கும்.
நாள்கள் மாறினாலும் நினைவுகள் மாறாது,
நட்பு விதைத்தால் வாழ்க்கை மலர்கிறது.
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை
நிலைக்கும் செல்வம் அது, நிஜமான வரம் அது.
காலம் கடந்தாலும் காயம் மறையும்,
கனிவான அன்பால் உலகம் நிறையும்.
உயிரின் துடிப்பாய் உறவுகள் இருந்தால்,
உண்மைப் பயணம் இனிதே தொடரும்!
(வே. ஜெயந்தி, செங்கல்பட்டு)