யாருக்கு வேண்டும் பொறுப்பு?

Su.tha Arivalagan
Sep 25, 2026,09:30 AM IST

- வே. ஜெயந்தி 


யாருக்கு வேண்டும்

பொறுப்பு?


பிறர் சுமத்தும்

சுமையா அது?

இல்லை

நமக்குள் மலர வேண்டிய

உணர்வா அது?


முதலில்

நமக்குள் வர வேண்டும்

பொறுப்பு




வார்த்தைகளில் அல்ல,

வாழ்க்கையில்

வெளிப்பட வேண்டும்.


செய்ய வேண்டியதை

யாரும் சொல்லாமல் செய்வதும்,

செய்த தவறை

யார்மீதும் சுமத்தாமல்

ஏற்றுக்கொள்வதும்

பொறுப்பு.


கடமை இருக்கும் இடத்தில்

கண்ணியம் பிறக்கும்;

பொறுப்பு இருக்கும் இடத்தில்

நம்பிக்கை வளரும்.


உலகம் மாற வேண்டும் என்று

காத்திருக்காமல்,

“மாற்றம் என்னிடமிருந்து”

என்று தொடங்கும் தருணமே

உண்மையான பொறுப்பு.


பொறுப்பைத் தேடாதே

பொறுப்புடன் வாழ்ந்திடு;

அப்போது

உன் வாழ்க்கையே

உனக்கான பதிலாகும்.


(V. JAYANTHI , Graduate teacher, Creative  Writer, Chengalpattu district)