- வீ. தமிழ்ச்செல்வி
ஒரு சில மனிதர்களை பார்க்கும் பொழுது ஒரு வித பயம் எழுகிறது.. ஏன் என்று தெரியவில்லை.
அவர்கள் மிக அதிகமாக கொண்டாடி தீர்த்த ஒருவரை ஒரு நொடிப் பொழுதில் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.. எப்படிப்பட்ட புகழின் உச்சியில் இருப்பவர்களின் தலைவிதியை கூட ஒரு நொடியில் மாற்றி விடுகிறார்கள்.. நிஜமான உண்மையை உணரும் போது தான்! உலகில் வாழ்ந்த மிகப் பெரிய ஜாம்பவான்கள் நினைவுக்கு வருகிறார்கள்..
எப்படி எல்லாம் இந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சூழ்நிலைகளை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.. இந்த பதவி, புகழ், விருதுகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்களாக இருக்கும் நபர்களைப் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..
அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு எத்தனை பெரிய துயரங்களை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள்.. எவ்வளவு இழப்புகளை அவர்கள் சந்தித்து இருந்திருப்பார்கள்.. அத்தனை வலிமையும் எங்கிருந்து வந்தது அவர்களுக்கு!!

அவர்கள் தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள மனப்போராட்டங்களையும், சமூக சூழ்நிலைகளை எதிர்கொள்ள எவை தைரியத்தை தந்து அவர்களை தேற்றிக்கொள்ள செய்தன.. மிகப்பெரிய சாதனை தான்.. இந்த சமூகத்தின் மத்தியில் வாழ்வது..
ஆம் இங்கே நமக்கு ஊக்கம் தந்தவர்களே, நம்மை உதாசீனம் செய்ய முடிகிறது.. நம்மை செதுக்கியவர்களே, நம்மை உடைக்க முடிகிறது.. நம்மை உயர்த்தியவர்கள், நம்மை கீழே தள்ளவும் முடிகிறது.. இந்த வாழ்க்கை ஒரு விந்தை, விசித்திரம் நிறைந்தது.. ஒவ்வொரு தருணமும் ஒரு புதியதொரு விளிம்பில் நிற்க வைக்கிறது..
புதிய அறிவைப் பெறுவதற்கு அனுபவத்தை வழங்குகிறது.. புதிய பாடங்களை கற்க வழிவகை செய்கிறது.. இவை அனைத்துமே அதன் போக்கில் நம்மை கொண்டு செல்கின்றன....
(வீ. தமிழ்ச்செல்வி, பட்டதாரி ஆசிரியர், அஉபள்ளி, அங்கு செட்டிபாளையம், பண்ருட்டி)
House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து
ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்
அன்பின் அணைப்பு
அதிகாலைத் தேநீராய்.. இதழ் பருகச் சுவையூறும்..!
பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு
நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!
தபால் பெட்டியும் கரப்பான் பூச்சியும்
கதை அல்ல நிஜம்.. ஏர்போர்ட்டில் என் மனதை உருக்கிய இரு காட்சிகள்!
கண்கள் மூடும் தூக்கத்தின் கனவில் கண்டேன் சிரிக்கிறாய்!
{{comments.comment}}