இயலாமையின் இருளை அகற்றுவோம் முழுமையாக!

Nov 08, 2026,02:48 PM IST
- கு.கவிதா

தீபங்கள் ஏற்றி மகிழ்வோம் தீபாவளியில், 
தீமைகள் அழிந்து நன்மைகள் தொடரும் இவ்வொளியில். 

புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவோம் இணக்கமாக, 
புதிய துவக்கங்களை உருவாக்குவோம் துடிப்பாக, 

பட்டாசுகள் வெடித்து சிதறட்டும் படபடவென, 
சந்தோஷ ஆறு பொங்கிப் பெருகட்டும் சலசலவென. 



இனிப்புகள் உண்டு மகிழ்வோம் களிப்பாக,
இயலாமையின் இருளை அகற்றுவோம் முழுமையாக. 

அன்பின் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களை பகிர்வோம் இன்முகமாக, 
அன்பால் பாலம் அமைப்போம் உலகமே உறவாக.!!! 
   
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

(கு. கவிதா, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்