விண்ணாய்ப் பரந்தும் விரிந்தே இருப்பவள்
Sep 28, 2026,03:50 PM IST
- கவிஞர் வ.கமலா
விண்ணாய்ப் பரந்தும் விரிந்தே இருப்பவள்
மண்ணில் அழகாய் மணப்பவள் - பெண்ணே
முகிலாய் பரவியே முத்தென நிற்கும்
அகிலமே போற்றிடும் அன்னை - முகிழ்தல்
திறத்தால் படித்தலில் திண்மையும் உண்மை
உறவினால் தோன்றி உதவும் - சிறகாய்
இயக்கிடும் செய்கை இறையென நின்றே
மயக்கும் விழியிலே மாண்பை - தயக்கமே
இன்றியே தந்திடல் இன்முகம் தன்னிலே
புன்னகை மிஞ்சும் புரட்சியும் - என்றும்
அயரா உழைப்பும் அணைக்கும் உறவாய்
இயல்பாய் இருந்தே இனிக்கும் - சுயநலம்
கொள்ளா உறவையும் கொண்டு.
(கவிஞர் வ.கமலா, B.sc, M.A., M.com, M.Ed., M.phil. ஓய்வு பெற்றஆசிரியர். மூன்று நூல்கள் எழுதியுள்ளேன். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்)