V Shankar Tamil Poem: காட்சிக்கு விருந்திங்கே.. கவலையைத் தொலை!
Apr 17, 2026,05:06 PM IST
- வி. சங்கர்
இயற்கை தந்திட்ட
இன்பச் சோலை
மகிழ்வை அள்ளித்
தந்திடும் அலை
பசுமை மரங்களும்
பரப்பியது வலை
பறவைகளும் கூடுகட்டி
இருந்திடும் நிலை
காட்சிக்கு விருந்திங்கே
கவலையைத் தொலை
காற்றுக்கு அங்கே
என்ன விலை
குளங்களும் காட்டுது
பிம்பத்தின் சிலை
குளிர்ந்தது மனசும்
பிறந்தது கலை
துளிர்த்திடும் பூக்களில்
விடியது காலை
(வெ. சங்கர், கிருஷ்ணகிரி)