சில உறவுகள்!

Su.tha Arivalagan
Apr 02, 2026,04:49 PM IST

- வீ. தமிழ்ச்செல்வி


நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் இருந்து வரும் ஒரு முகம். எனக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்று தோன்றியது. பார்த்தவுடன் எங்கும் பரவசம் குடி கொண்டது.


அந்த முகம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தது. ஒரு வித பதட்டமா இல்ல சந்தோஷமா ஏதோ ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டால் அவளுக்கு நம்மை நினைவில் இருக்குமா நாம்தான் என்று நம்மை அறிந்திருப்பாலோ என்று பல கோடி எண்ணங்கள் ஒரு மின்னல் போல் எனக்குள் வந்து சென்று விட்டது.




அவளும் நான் நிற்கும் அதே இடத்திற்கு வந்து நின்று நீ சுதா தானே என்று அழைத்த போது என்னுள் இருந்த அத்தனை ஐயங்களும் ஒரு நிலைக்கு வந்தது. நானும் நிலா நீ இங்க என்ன பண்ற கேட்டபொழுது, நான் இங்குதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன் அவள் பதில் கூறிக்கொண்டே அவளின்  நண்பர்களிடம் கைசைத்து கொண்டிருந்தாள்.


சரி வா உக்காந்து டீ சாப்பிடலாம் என்று கூறினேன். இல்லை எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்.. என்று சொல்லி சென்று விட்டாள்.. நானும் அவளின் நெருங்கிய தோழிதான் என்பதை மறந்து விட்டு!!!


(தமிழ்ச்செல்வி வீ, GHS, ANGUCHETTIPALAYAM)