வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
- ஸ்வர்ணலட்சுமி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாதம் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர தினத்தில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
பராபவ ஆண்டு 2026 மே மாதம் 21 வைகாசி ஏழாம் நாள் வியாழக்கிழமை புகழ்பெற்ற வசந்த திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. வைகாசி விசாகத் திருவிழா மே 30ஆம் தேதி சனிக்கிழமை,வைகாசி 16ஆம் நாள் கோலாகலமாக நடைபெற இருப்பதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இப்போது இருந்தே திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் நகர் முழுவதும் தற்போதே ஆன்மீகக் களை கட்டத் தொடங்கி உள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் பகல் பொழுதில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் சண்முக விலாச மண்டபத்திற்கு செல்வார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மேலும் வைகாசி விசாக சிறப்புகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.