வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!

May 15, 2026,12:20 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ  வருடம் 20 26 மே 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று வைகாசி மாதம் பிறந்துள்ளது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் வைகாசி மாதம் பௌர்ணமியும் விசாக நட்சத்திரமும் சேரும் நாளில்  தான் அவதரித்தார். வைகாசி முதல் நாள் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் அமைந்துள்ளது மிகவும் விசேஷம்.


வளம் தரும் வைகாசி மாதத்தை "மாதவ மாதம்" என்றும் "வைகாசம்" என்றும் போற்றுவர். வைகாசி முதல் நாள் கங்கை நதியில் நீராடினால் ஏழு ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று  சாஸ்திரம் கூறுகிறது.


இம்மாதம் புனித நதிகளில் நீராடி மகாவிஷ்ணுவை துளசி இலைகளால் பூஜை செய்துவர நட்பேறுகள் பெற்று,சிறந்த வாழ்வு வாழலாம் என விஷ்ணு புராணம் கூறுகிறது. வைகாசி பவுர்ணமியில் சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி யானது ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தோன்றியது.




கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பவுர்ணமி என்று வரலாறு கூறுகிறது.அவர் கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமி அன்றுதான். சிவபெருமான்- பார்வதி திருமணமும், முருகப்பெருமான்- தெய்வானை திருமணமும் இந்த வைகாசி மாதத்தில் தான் நடைபெற்றது.


வைகாசி மாதத்தில் வழிபாடுகள் மேற்கொள்வதனால் நீள் ஆயுள்,செல்வம்,புத்திர பேறு, குடும்பத்தில் அமைதி, நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். மே மாதம் 15 முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை வைகாசி மாதம் உள்ளது. இம்மாதம் சிவன், விஷ்ணு, முருகன், நரசிம்மன், அனுமன்  வழிபாடு மற்றும் புனித நீராடலுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.


முக்கிய நிகழ்ச்சிகள்:


வைகாசி விசாகம் (முருகன் அவதரித்த நாள் ):


வைகாசி மாத பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரமும், சேர்ந்த நாளில் தான் முருகப்பெருமான் பிறந்தார். இந்த நாளை வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பால்காவடி,பால்குடம் எடுத்து முருகனை வழிபடுவது சிறப்பானது.


நரசிம்ம ஜெயந்தி:


வைகாசி சுக்ல சதுர்த்தசியில் விஷ்ணு, பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து துன்பங்களை போக்கி ஆயுள் மற்றும் செல்வத்தை அருளும் நாளாக கொண்டாடப்படுகிறது.


அனுமன் வழிபாடு : வைகாசி மாதத்தில் அனுமனை வழிபடுவது கஷ்டங்களை நீக்கும், என்று கூறப்படுகிறது.


ரிஷப விரதம்:


சிவபெருமானை போற்றி ரிஷப விரதம் இருந்து எள் தானம் செய்வதனால் பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.


அக்னி நட்சத்திரம் முடிவு :


கோடை காலத்தில் உச்சமான கத்திரி வெயில் வைகாசி மாதத்தில் முடிவடைவதனால் இறைவனுக்கு குளிர்ச்சியான அபிஷேகங்கள் சிறப்பாக செய்யப்படுகிறது.


வைகாசி மாத விசேஷமான நாட்கள்:


வைகாசி 1  மே 15- மாதசிவராத்திரி.


வைகாசி 2   மே 16- அமாவாசை  -இன்று அதிகாலை 0 3:59 முதல் நாளை அதிகாலை 02:0 9 வரை .


வைகாசி 14     மே 28- பக்ரீத் பண்டிகை.


வைகாசி 16     மே 30- பவுர்ணமி  வைகாசி விசாகம்.( பௌர்ணமி திதி இன்று பிற்பகல்  12 :55 முதல் நாளை பிற்பகல் 

 2 :45 வரை.)


ஜூன் 4   வைகாசி 21 சங்கடஹர சதுர்த்தி.


ஜூன் 13 வைகாசி 30 மாத சிவராத்திரி.


ஜூன் 14 வைகாசி 31 -அமாவாசை.


இன்று முதல் துவங்கி இருக்கும் வசந்தகால வைகாசி மாதத்தை போற்றி வழிபடுவோமாக. மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

news

வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!

news

NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

news

அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்