திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு
-கலைவாணி கோபால்
சென்னை : சென்னையின் மிக முக்கியமான வைணவ தலமான திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் ( மார்கழி 15) December 30,அன்று சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மாதம் மாதம் இரண்டு ஏகாதசி வருகிறது. ஆனால் , மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசி( முக்கோடி ஏகாதசி) என்றும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், கருதப்படுகிறது. இக்கோவிலானது 108 திவ்ய தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது பல்லவ மன்னர் நரசிம்ம வர்மனால் ஆறாம் நூற்றாண்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கும். என
கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன.
ஸ்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த செய்தி என்னவென்றால், அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்த அதே திருக்கோலத்தில் காட்சி தருவது தான்.
அதனால் இங்குள்ள பெருமாளுக்கு கீதாச்சாரியா பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மேலும் சிறப்பு என்னவென்றால் இங்கு இருக்கும் மூலவர் 9அடி உயரத்தில் நின்றகோலத்தில் காட்சி அளித்து அருபாளித்து வருகிறார். எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு உள்ள பெருமாளின் முகத்தில் வடுக்களும், மீசையும் காணப்படுகின்றன.
இந்த வடுக்கள் மகாபாரத போரில் பீஷ்மர் அர்ஜுனரை எதிர்த்து விட்ட அம்புகள் அனைத்தையும் கிருஷ்ணர் முன் நின்று
தாங்கிக் கொண்டதாகவும், அதன் வெளிப்பாட்டில் அடிப்படை தான் இந்த வடுக்கள் என்ன செய்திகள் அங்குள்ள வைணவர்கள் மூலமாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும் இந்த கோயிலில் விஷ்ணு ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார் .ஒரே இடத்தில் இப்படி காட்சி கொடுப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
இப்படி இன்னும் பல சிறப்புகள் வாழ்ந்த இந்த கோவிலில் வருகிற மார்கழி 15, அதாவது டிசம்பர் 30 இல் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமானை வழிபடுவது என்பது நம்முடைய பிறவி பாவங்கள் போக்கி, சொர்க்கத்திற்கு செல்ல முடியும், என்பது மட்டுமல்லாமல் எல்லோரிடமும் வாழ்விலும் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் சொல்ல படுகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)