துளிர்க்கும் பொழுதில் துளிகள்
Oct 22, 2026,01:28 PM IST
- வெங்கடேஷ்
வானத்தில் உள்ளம் முகில் சரடாய்
மலைத்தொடர் முன்
படர்ந்து செல்ல
உயிரில் உரையும் அனலை எழுப்ப வந்த
விசும்பிள் புனல் புவியை நனைக்க
கருவறையில் திரைக்குப்பின் அலங்கரிக்கப்படும்
கடவுள் போல
மழைமுகில் பின் ஒளிபரப்பும் ஆதவன்
--
சாரலில் இருந்து
சாலைக்கு குடை பிடிக்கும்
சாலையோர மரங்கள்
--
காணாமல் ஆன குளத்தின் காணலாய்
சாலை பள்ளத்தை நிறைத்த
மழைநீர்
--
பொழிந்தாலும் பொழியச் செய்தாலும்
தூறினாலும் தூற்றலை பரிசாகப் பெற்றுச் செல்லும்
--
நீரை சுழிக்க வைக்க
கல் எறிந்து விளையாடும் குழந்தை போல்
நீரில் விளையாடும்
தூறல்!
(கவிஞர் அ வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இருள் என்பது குறைந்த ஒளியே என்ற நூலின் ஆசிரியர்)