- ரதிதேவி
புயலென்று எழுவாயோ
தூறலென்று செல்வாயோ
மீண்டும் உன் வருகை
மீட்சி தருமா
நீட்சி தருமா
மகிழவா
துயிலவா
துக்கம் கொள்ளவா
எண்ணுகிறேன்
மீண்டும் உன் வருகை நினைத்து....

வளர்ந்தோங்கிய விஞ்ஞான
உலகிலும்
கைக்குள் அடங்கிய
தொழில்நுட்பமும்
என்னதான் வளர்ந்தாலும்
உன் வருகையும்
உன் ஆக்கமும் அழிவும்
யாரறிவார்
மழையே
மீண்டும் உன் வருகை
மகிழ்வா...
இயற்கையின் விஞ்ஞானத்தில்
மனிதனின்
விஞ்ஞானம்
தோற்று போய்விடும்...
மகிழ்ச்சி கொள்கின்றான்
ஓர் விவசாயி
கவலை கொள்கின்றான்
சாலையோர வியாபாரி
மீண்டும் உன் வருகை கண்டு
மழையே
உந்தன் வருகை இயற்கை என்று
ஆறறிவு மனிதன்
அறிய தவறுகிறான்....
விஞ்ஞான உலகிலும்
வெள்ளமாக பாய்ந்து
இயற்கையின் பரிசு
நான் என்று உணர வைக்கின்றாய்
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!
காத்திருப்பு.. ஒரு நிமிடக் கதை (43)
Short Story: கடமையின் பின்னே ஒரு மனிதநேயம்
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்!!
கருப்பு.. ஒரு மனதின் குமுறல்!
{{comments.comment}}