- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
புயலடித்தால் சாய்ந்திடுவேன்,
புதுவலிமையோடு எழுந்திடுவேன்!
தடைகள் வந்து தடுத்தாலும்,
தளராத மனதோடு நடந்திடுவேன்!
விழிகள் சிந்தும் கண்ணீரிலும்,
விடியலுக்கான வழி தேடுவேன்!
விதி என்று முடங்காமல்,
விடாமுயற்சியால் வென்றிடுவேன்!
கல்லும் முள்ளும் நிறைந்த பாதை,
காலம் தரும் ஒரு பாடம்!

காயங்கள் கூடச் சொல்லித் தரும்,
வாழ்க்கை என்னும் அனுபவ வேதம்!
என்னை வீழ்த்த நினைப்பவர்க்கு,
என் வெற்றியே பதிலாகும்!
என்னைத் தாழ்த்தும் வார்த்தைகளுக்கு,
என் சாதனை விடையாகும்!
வேர்களை ஆழப் பதித்துவிட்டேன்,
வெற்றிக்கான விதை விதைத்துவிட்டேன்!
புயல்கள் எத்தனை வந்தாலும்,
புன்னகையோடு எதிர்கொள்வேன்!
விழுவது என் முடிவல்ல,
எழுவது என் இயல்பு!
தோற்பது என் கதையல்ல,
வெல்வதே என் இலக்கு!
நானும் அப்படித்தான் —
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)
The Mask We Wear
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
கனாக் கண்டேனடி!
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
கட்டுமரம் வாழ்க்கை!
"சீதனமாக அப்பா கொடுத்த ஸ்கூட்டர்!"
காத்திருப்பு.. ஒரு நிமிடக் கதை (43)
Short Story: கடமையின் பின்னே ஒரு மனிதநேயம்
{{comments.comment}}