இதுவும் கடந்து போகும்- ரம்யாவின் கவிதைத் தோட்டம் (5)

Oct 21, 2026,11:41 AM IST

- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்


இன்று உன் பாதையில்

இருள் சூழ்ந்திருக்கலாம்…


நீ எதிர்பார்த்த வாழ்க்கை

திசை மாறியிருக்கலாம்…


நேசித்த உறவுகள்

நெஞ்சைக் காயப்படுத்தலாம்…


நம்பிய கனவுகள் கூட

கண்ணீரில் கரைந்திருக்கலாம்…




கவலைகள் கூடும்போது

காலமும் நின்றதுபோல் தோன்றும்…


கண்ணீரை மறைக்கும்போது

உலகமே தனிமையாய்த் தோன்றும்…


ஆனால்…


இரவு முழுவதும் நீண்டாலும்

விடியல் வராமல் போவதில்லை!


மேகம் சூரியனை மறைத்தாலும்

அதன் ஒளி அழிந்துவிடுவதில்லை!


விழுந்துவிட்டாய் என்பதால்

உன் பயணம் முடிந்துவிடாது…


தோற்றுவிட்டாய் என்பதால்

உன் வாழ்க்கை தோற்றுவிடாது…


காலம் சில காயங்களை ஆற்றும்,

அனுபவம் பல பாடங்களைக் கற்றுத்தரும்…


இன்று சிந்தும் கண்ணீர்கூட

நாளை ஒரு கதையாக மாறும்…


மகிழ்ச்சியும் நிரந்தரமில்லை,

மனக்காயமும் நிரந்தரமில்லை…


வாழ்க்கை ஒரு பயணம்…

வலிகளும் அதன் வழித்தடங்கள்…


நம்பிக்கையோடு நடந்திடு,

நாளை உனக்காகவும் மலர்ந்திடும்!


இன்று உன்னை வாட்டும் துயரமெல்லாம்…

நாளை நினைவாக மாறலாம்…


மனமே, கலங்காதே…

இதுவும் கடந்து போகும்!


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இதுவும் கடந்து போகும்- ரம்யாவின் கவிதைத் தோட்டம் (5)

news

Success A Journey of Struggle

news

கண்டிக்கா பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (6)

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: 10 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் வானிலை மையம் எச்சரிக்கை!

news

இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

news

தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!

news

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அதிகம் பார்க்கும் செய்திகள்