தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

Oct 21, 2026,05:12 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளையும், மின்சார விபத்துகளையும் தவிர்க்கப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்தியுள்ளது.   


மின்வாரியம் வெளியிட்டுள்ள முக்கியப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:


மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள்: மின் கம்பங்கள், மின் மாற்றிகள் (Transformers) மற்றும் மின் பகிர்மானப் பெட்டிகள் (Distribution Boxes) ஆகியவற்றின் அருகில் செல்வதையோ அல்லது அவற்றின் அருகே தேங்கியுள்ள மழைநீரில் இறங்குவதையோ பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.


அறுந்து விழுந்த மின்கம்பிகள்: தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால், அவற்றை அருகில் சென்று தொடவோ, கையால் அப்புறப்படுத்தவோ கூடாது.   


இடி, மின்னல் பாதுகாப்பு: இடி மற்றும் மின்னல் இடிக்கும் நேரங்களில் திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்சாரக் கம்பங்கள் அல்லது மின்சாரக் கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.   




மரக்கிளைகள் அகற்றுதல்: மின்கம்பிகளில் முறிந்தும் அறுந்தும் விழுந்த மரக்கிளைகளைப் பொதுமக்கள் தாமாகவே வெட்டவோ, கயிற்றால் இழுத்து அகற்றவோ முயற்சிக்கக் கூடாது.   


மின்கம்பங்களைப் பயன்படுத்தத் தடை: மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளைக் காயவைத்தல், விளம்பரப் பலகைகளைக் கட்டுதல் அல்லது பந்தல்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது.   


வீட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை: வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 'RCCB' (Residual Current Circuit Breakers) சாதனத்தைப் பொருத்துவது அவசியமாகும்.   


அவசர உதவி மற்றும் மின்சாரக் புகார்களுக்கு:மின்சாரத் தடை, அறுந்து விழுந்த மின்கம்பிகள், மின்கசிவு போன்ற அவசர காலப் புகார்களுக்குப் பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்தின் 'மின்நகம்' மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.   


அவசர உதவி எண் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp): 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் செய்தி வாயிலாகவோ தொடர்பு கொண்டு உடனுக்குடன் புகார்களைப் பதிவு செய்து தேவையான உதவிகளைப் பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

news

மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

news

எது முன்னேற்றம்?

news

நம்ப குழந்தைதானே!

news

ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்