வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

Meenakshi
Sep 16, 2025,12:58 PM IST

சென்னை: வொர்க் ஃபிரம் ஹோம் தலைவராக இருந்ததை மாறி வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் விஜய் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களை சந்தித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், விஜய்க்கு கூட்டம் வருகிறது. விஜய்க்கு வரும் கூட்டம் அவரை பார்க்க வந்த கூட்டமா? ஓட்டு போடும் கூட்டமா? என்பது தேர்தலில் தான் தெரியும். இன்னும் கொஞ்சம் முறைப்படுத்த வேண்டும். நிறைய பேர் மயக்கி விழுகின்றனர். தண்ணிநீர் இல்லாமல் இருப்பது என்பது கவலை அளிக்கிறது. ஒர் நாள் என்று குறிப்பிடுவதால் கூட்டம் அதிகமாகி விடுகிறது. அதனால் தம்பி கொஞ்சம் இன்னும் முறைப்படுத்த வேண்டும். 




அவருடைய தாக்கம் போகப்போக தான் தெரியும். முதலில் மக்களை சந்திக்காமல் இருந்தார். இப்போது அரசியல் தலைவராக மக்களை சந்தித்து வருகிறார். ஆனால், ஆனவசியமாக பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி தெரியாமல் பேசுகிறார். பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு நல்லது செய்து கொண்டு இருக்கிறது. அதனால், தம்பி திமுகவின் எதிர்ப்பை மற்றும் வலுப்படுத்த வேண்டுமே தவிர பாஜகவை எதிர்க்கக்கூடாது. 


இந்த கட்சி மக்களுக்கு நல்லது செய்து கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  திமுகவின் மீதான் தனது எதிர்ப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறியது உண்மை தான். அவரே கூறும் போது நான் என்ன செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.