சென்னை : திருச்சியை தொடர்ந்து நாகை மாவட்ட போலீசாரும் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அடுக்கடுக்காக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதனையடுத்து விஜய் தனது அடுத்த கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கினார். இதற்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடைசியாக 16 நிபந்தனைகளுடன் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மரக்கடை மார்க்கெட் பகுதியில் மட்டுமே விஜய் பேச வேண்டும் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே போல் ரோடுஷோ நடத்தக் கூடாது, 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விஜய்க்கு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. யாரும் எதிர்பாராத வகையில் திருச்சியில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் விஜய்யை காண திரண்டனர். இதனால் கூட்ட இடத்தை அடையவே பல மணி நேரம் ஆனது. இதனால் எல்லாமே தாமதமாகிப் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூர் சென்று பிரச்சாரம் செய்த விஜய், பெரம்பலூர் செல்வதற்கு கால தாமதம் ஆனதால் பேசாமல் சென்று விட்டார்.

அடுத்த கட்டமாக விஜய், செப்டம்பர் 20ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. நாகையில் மொத்தமாக ஏழு இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கு தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார், புத்தூர் ரவுண்டானா பகுதி அருகில் மட்டும் பிரச்சாரம் செய்வதற்காக விஜய்க்கு அனுமதி அளித்துள்ளார்கள்.
அதோடு, திருச்சியில் அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடியதால், விஜய்யின் வாகனத்தை தாமதப்படுத்தும் வகையில் அவரது வாகனத்தை தொண்டர்கள் யாரும் பின் தொடர்ந்து செல்லக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விஜய் பேச வேண்டும். வாகனத்தின் மீது நின்றி பயணம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
திருச்சி போலீசார் கடைசி நிமிடத்திலேயே அனுமதி அளித்ததால் சரியாக திட்டமிட முடியாமல் போனதால் விஜய்யின் பிரச்சாரம் தொடர்பாக அனுமதி கேட்டு, அனைத்து மாவட்ட போலீசாரிடமும் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் பிரச்சாரத்திற்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் திட்டமிட்டபடி பிரச்சார பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், போலீசாரின் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒரு நாளைக்கு மூன்று மாவட்டங்களுக்கு சென்று பிரச்சார சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டிருந்த விஜய், தற்போது அதில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 மாவட்டங்கள் என்பதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் சென்று பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் பிரச்சாரம் வெற்றிகரமாக அமைவதும், அவர் பேசுவது மக்களை அடைவதும்.. அவரது கட்சியினர் கையில்தான் உள்ளது. அவர்கள் சிறப்பாக ஒத்துழைத்தால் மட்டுமே விஜய்யால் திட்டமிட்டபடி மக்களை சென்றடைய முடியும். இல்லாவிட்டால் மக்களின் அதிருப்தியையே சம்பாதிக்க நேரிடும் என்பதால் தவெகவினர் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று தவெக அனுதாபிகள் கருதுகிறார்கள்.
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}