சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 18) நேர்காணல் நடத்த உள்ளார்.
திமுக.,வில் ஓபிஎஸ் விருப்பமனு :
அதிமுக-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் பாதையை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருந்தார். இதன் ஒரு பகுதியாக, திமுக.,வில் இணைந்த அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அவர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுக-வின் முகமாக இருந்த ஒரு மூத்த தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய ஆர்வம் காட்டியது அக்கட்சியின் தொண்டர்களிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியது. எனினும், தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக இதனை திமுக தலைமை கவனித்து வந்தது.
இன்றைய நேர்காணல் :

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 18-ம் தேதியான இன்று நடைபெறுகிறது. இதில், முக்கிய நபராகக் கருதப்படும் ஓ.பன்னீர்செல்வத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சந்தித்து நேர்காணல் செய்கிறார். இந்தச் சந்திப்பில் பின்வரும் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:
1. ஓ.பி.எஸ் போட்டியிட விரும்பும் தொகுதி.
2. அவருடன் வரும் ஆதரவாளர்களுக்கான இட ஒதுக்கீடு.
3. தேர்தல் பிரச்சாரத்தில் அவரின் பங்களிப்பு.
அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா?
"ஜனநாயகத் திருவிழா 2026" என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக-விற்கு, ஓ.பி.எஸ் போன்ற அனுபவம் வாய்ந்த ஒரு தலைவரின் வருகை தென் மாவட்டங்களில் கூடுதல் பலத்தைத் தரும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், இது அதிமுக-விற்குப் பின்னடைவாக அமையுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஓபிஎஸ் இந்த முறை திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்றால் ஆண்டிப்பட்டி அவருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}