விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
தஞ்சை : விஜய் வேண்டுமா? ஸ்டாலின் சார் வேண்டுமா? என தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஆலேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், அடுத்த பிறவியில் தான் ஒரு விவசாயியாக பிறக்க விரும்புவதாக தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று தவெக.,வின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பச்சை துண்டு அணிந்து வந்தார் விஜய். இதில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான் என்பதற்காக தான் தமிழ்நாடு என்றால் விஜய் என்று கூறினேன். மக்களை ஏமாற்றும் இனியும் நடக்காது. இன்னும் தமிழ், தமிழ், தமிழ்நாடு என்பது வேலைக்கே ஆகாது. கிரிக்கெட்டில் கூட டில்லியால் தமிழ்நாட்டை தொட்டு கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே. அதே போல் தேர்தலில் விசில் போட போவது டிவிகே.
திமுக இல்லை என்றால் தமிழ்நாடு இல்லையா? தவெக தான் தமிழ்நாடு; தமிழ்நாடு தான் தவெக. மற்றவர்களுக்கு தான் இது தேர்தல். என்னை நேசிப்பவர்களுக்கு தான் தெரியும் இது உணர்வுப்பூர்வமான உறவு பிணைப்பு. ஊழல் அற்ற உண்மையான ஆட்சியாக நம்ம ஆட்சி அமைப்பீங்க தான? இந்த விஜய்க்கு ஒரு கொடுப்பீங்க தான? இந்த விஜய்யை நம்புறீங்க தான? ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் ஒலிக்கும் தான? ஊழல் அற்ற சமூகநீதி ஆட்சி அமைப்போம்.
உலகத்தை படைத்த கடவுளுக்கே படையல் போடுறவங்க தான் விவசாயி. அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தை பற்றி தெரியாது தான். இந்த தேர்தலில் உங்க கூட்டணி பறக்கும். அதை தவெக பறக்க விடும். மணல் மாஃபியாவிற்கு திமுக.,வுக்கு உறவு இல்லை என சொல்ல முடியுமா? இரட்டை வேடம் போடும் திமுக. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போட்டது திமுக. மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? பெரிய திட்டங்களை ஆட்சி முடியும் போது தான் செய்வீர்களா?
மீனர்கள் பிரச்சனைக்கு அவ்வப்போது எழுந்து கடிதம் எழுதி விட்டு தூங்க விடுவார்கள். கடிதம் எழுதுவது வேலைக்கு ஆகாது. மீனவர்களின் பாதுகாப்பை தவெக உறுதி செய்யும். திமுக இரண்டாவது முறையாக வருவது சரித்திரத்துலயே கிடையாது. திமுக.,வும் அதிமுக.,வும் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது தவெக வந்து விட்டதால் இரு கட்சிகளும் நம்மை சுற்றி ஏராமான சதி செய்கிறார்கள். கரூர் விவகாரம் துவங்கி, ஜனநாயகன் பட ரிலீஸ் வரை சதி செய்றாங்க. ஆனால் ஜனநாயகன் பட விவகாரத்தில் சில ஆதரவாக குரல் கொடுத்தார்கள். ஜனநாயகனுக்காக பேசிய முதல்வருக்கு நன்றி.
தவெக.,விற்காக மக்கள் பிரச்சாரத்தை துவக்கி விட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார் முதல்வர். மக்களின் அடிப்படை விஷயங்களை செய்ய நிதி இல்லை என்கிறீர்கள். ஆனால் உங்கள் அப்பாவிற்கு சிலை வைக்க பணம் எங்கிருந்து வந்தது? நீங்கள் என்னை தான் முடக்க முடியும். வீட்டுக்கு வீடு இருக்கும் விஜய்யை முடக்க முடியாது. ஊரார் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் பண்ணாதீங்க. நீங்க கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு? மோசடி திமுக ஆட்சி. நீட் தேர்வை ஒழிப்பேன் என்றீர்களே அது எவ்வளவு பெரிய மோசடி?
மக்களே இன்று சட்ட ஒழுங்கு சீரழிவு பற்றி பேசுகிறார்கள். ஸ்டாலின் தொடர்ந்தால் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும். தவெக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்த விஜய், தவெக.,வில் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார். அவை,
1. விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்.
2. புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
3. ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து தரப்படும்.
4. ரேஷன் கடைகளில் ஆண்களுக்கு ஆண் விநியோகஸ்தரும், பெண்களுக்கு பெண் விநியோகஸ்தர்களும் நியமிக்கப்படுவார்கள்
5. அரசு துறை மட்டுமின்றி தனியார் துறையிலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
6. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இல்லாத விவசாய குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.