கொசுவின் அங்கலாய்ப்பு!

Su.tha Arivalagan
Aug 22, 2026,11:15 AM IST
- விஜயலக்ஷ்மி கண்ணன் 

நம்மை ஒழித்துக் கட்டும் நாளாம்!
மனிதர்கள் பேசுவது விழுந்தது செவியில்.

நம் சுதந்திரம் தொலைந்து விடும் போல் இருக்கே!

இருட்டினால் விரட்டுவார்கள்
என அறிந்து தானே 

முன்னதாகவே உள்ளே நுழைந்து விடுகிறோம்!

என்ன, நமக்கு ஆயுசு குறைச்சல்.
நசுக்கி விடுகிறார்கள் நம்மை

நாமும் விடுவதில்லையே!



கிடைத்த இடத்தில்
கடித்து விடுகிறோம்!

கொசுவை 
ஒழிக்க மானிடர்
காசை நீராய் செலவிட 

நாமும்  விடாது
பாடிக்கொண்டே
நச் என ஊசிபோட்டு

நம் திறமையை
காட்டி உதை பட்டு போகிறோம்!

நாம் ஒன்றும்  கோழை இல்லை.

சாகும் வரை இவர்களோடு
போராடுவோம்!

(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)