முன்கோபம்
- "சொல்லம்புச் சிற்பி" விமலா கோவிந்த ராஜு
பாரு கருவிழி மறைக்கும்
வெண்படலமாய்...
காரிருள் சூழ்ந்த
கருப்புக் காகிதமாய்...
செந்நிறக் குருதி
நனைத்த செந்தாமரையாய்...
பொன்னுக்குள் மறைத்த
பொய்ச் செம்பாய்....
பெண்ணுக்குள் விழுந்த
காதல் கருவாய்..
மண்ணுக்குள் புதைந்த
மழைநீராய்..
நிதம் நெஞ்சுக்குள் எரியும்
நித்த நினைவாய்..
பஞ்சத்தில் வளர்ந்த
பாரி மனமாய்....
கஞ்சத்திலும் கசியும்
அன்பூற்றாய்....
மஞ்சத்திலும் மறைத்த
மனவேதனையாய்...
அரளியிலும் அரும்பிய
துளித்தேனாய்..
சரளியிலே முளைத்த
குமட்டிக்கீரையாய்.
முள் தைத்திட!
(எழுத்தாளர் விமலா கோவிந்தராஜு, மேட்டூர் அணை. மேட்டாங்காடு என்ற பெயரில் கவிதை நூல் வெளியிட்டுள்ளார். காவிரிப் பிள்ளைகள் அறக்கட்டளை என்றொரு அறக்கட்டளையை நிறுவி இதுவரை 25000 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளார். கவிஞர், எழுத்தாளர், புரட்சிகர சிந்தனையாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளர்)