சாட்டையெடுத்து காட்டு.. தானாய் திருந்தட்டும்.. மதிகெட்ட செம்மறிக்கூட்டம்!

Su.tha Arivalagan
Nov 26, 2026,04:00 PM IST

- "சொல்லம்புச் சிற்பி" விமலா கோவிந்த ராஜு


ஒரு யோனியும் இரு முலைகளும் மட்டுமே பெண்.....

புணர்தலைத் தவிர வேறுதொழில்லை

அவள்களுக்கு....


மனதில்லை வலிமையில்லை

திறமையில்லை 

தனித்திறனில்லை....

குறிக்கோள்கள்கள் இல்லை

பற்றில்லை பாசமில்லை

நேசமில்லை உணர்வுகளில்லை...


ஏதுமற்றவள்கள் அவள்கள்....

எங்கு சென்றாலுமே 

எவரைக் கண்டாலும் 

புணர்தலே அவளாவாள்....





ஆணாகினும் பெண்ணாகினும்

அன்னையாகினும் உடன் பிறந்தோராகினும் 

அனைவர் பார்வையிலும்

அவள் இப்படித்தான் தெரிகிறாளோ....


அவர் எண்ணங்கள் நாசமாகட்டும்

அவர்களின் அழுக்குள்ளங்கள் 

வெள்ளையாகட்டும்


தானாய் நடக்கவில்லையெனில்

தடியெடுத்து நடத்திக்காட்டு....


வீணாய்போன வெளங்காதவர்களின் 

பாழாய்போன வார்த்தைகளுக்கு

சாட்டையெடுத்து காட்டு


தானாய் திருந்தட்டும்

மதிகெட்ட செம்மரிக்கூட்டம்


தறிகெட்டலையாமல் 

பகுத்தறிவுக்கூட்டுக்குள் போட்டடை..

அப்போதாவது

நெறிகண்டு பேசட்டும்!


(எழுத்தாளர் விமலா கோவிந்தராஜு, மேட்டூர் அணை. மேட்டாங்காடு என்ற பெயரில் கவிதை நூல் வெளியிட்டுள்ளார். 

காவிரிப்பிள்ளைகள் அறக்கட்டளை என்றொரு அறக்கட்டளையை நிறுவி இதுவரை 25000 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளார். கவிஞர், எழுத்தாளர், புரட்சிகர சிந்தனையாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளர்)