டிராபிக் போலீஸ்.. விஷாலின் விளையாட்டு (14)

Su.tha Arivalagan
Apr 30, 2026,11:18 AM IST

- பா. பானுமதி


வெள்ளாளப்பட்டி பள்ளி சாலையின் மீது இருப்பதால் மாலை பள்ளி விட்டதும் யாரேனும் ஒரு ஆசிரியர் மாணவர்களை சாலையின் மறுபக்கம் அனுப்ப ரோட்டில் நின்று  இருபுறமும் பார்த்துவிட்டு அனுப்புவார். 


வெளிமாவட்ட வண்டிகள் என்றால் அங்கு நிற்காது, வேகமாக செல்லும். உள்ளூர் வண்டிகளானால் மட்டும்  பாவம் பிள்ளைகள் என்று நின்று செல்லும். 


பள்ளி முடிந்ததும் அன்று மாலை நாட்டுப் பண் பாடி விட்டு விஷாலை அங்கே நிறுத்திவிட்டு மாணவர்களை  அனுப்பச் சென்றேன். இருபுறமும் பார்த்துவிட்டு வண்டி ஏதும் வராததால் மாணவர்களை வரிசையாக அனுப்பி வைத்தேன். எல்லாரும் சென்று விட்டனர் .


இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒருபுறம் இருந்தது. ஆனால் அவர்கள் மாணவர்கள் சென்ற பின்பும் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள் .




போகலாம் என்று நான் கை காட்ட மறுபுறம் பேருந்து சத்தம் திரும்பிப் பார்த்தால் அங்கு வந்து விஷால் நின்று கொண்டு சாலையின் குறுக்கே இருபுறமும் கைநீட்டி டிராபிக் போலீஸ் போல நிக்கிறான். அதனால் பேருந்து சத்தம் கொடுத்தது.


எனக்கு மிக்க ஆச்சரியமாக இருந்தாலும் விஷாலை வேகமாக அழைத்துக் கொண்டு பள்ளியின் உள்ளே வந்தபின் மறுபடியும் சாலை பிஸியாக மாறிவிட்டது. 


தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் வியந்தே போனார்கள். இனி கவலை இல்லை. விஷால் எல்லா பிள்ளைகளையும் அந்த பக்கம் அனுப்பி விடுவான் என்று டிராபிக் போலீஸ் ஆனவனுக்கு எல்லோரும் கை கொடுத்தார்கள் .


விஷால் விளையாட்டு தொடரும்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)