- பா. பானுமதி
பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது பேருந்தில் விஷாலுக்கு மட்டுமே அமர இடம் கிடைத்தது. விஷால் அம்மாவுக்கு இடம் கிடைக்காமல் சற்று தள்ளி ஒரு இடம் இருந்தால் அங்கு சென்று அமர்ந்து கொண்டார். இறங்கும்போது சேர்ந்து இறங்கி விடலாம் என்று நினைத்திருந்தார்.
பேருந்து நிலையம் சென்றதும் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷால் அம்மா இறங்குவதற்கு முன் விஷால் கீழே இறங்கி விட்டான். வேகமாக இறங்கி கீழே பார்த்தால் பிள்ளையை காணவில்லை.
போச்சுடா என்ற தலையில் கை வைத்து நாலாபுறமும் விஷாலை தேடினார்கள். உடனிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையாக விஷாலை தேடிக் கொண்டிருந்தனர்.
எங்கும் விஷாலை காணவில்லை. பள்ளிப் பிள்ளைகள் கல்லூரி பிள்ளைகள் என அனைவரும் விசாலை தேடினர்.

அங்கு ஒரு காவலர் நின்று கொண்டிருக்க அவரிடம் சென்று விவரம் கூறினார்கள் .அவர் நிறைய வினாக்களை வரிசையாக கேட்டார். ஒரு நிமிடம் கொசவபட்டி பேருந்து சென்றுவிடும், அதில் என் தலைமையாசிரியர் இருக்கிறார். அவரிடம் விவரத்தை கூறிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு விஷாலின் அம்மா அந்த பேருந்தை நோக்கி சென்றார் .
அங்கு கண்ட காட்சி கண்களால் நம்ப முடியவில்லை. விஷால் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு பக்கத்தில் ஒரு இடம் பிடித்து வைத்திருந்தான். மகிழ்ச்சியுடன் சென்று காவலரிடம் விவரம் கூறினார் அவன் அம்மா. தான் ஏற வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று விவரமாக தெரிந்து கொண்டு பேருந்து விட்டு இறங்கியதும் அம்மாவை எதிர்பார்க்காமல் நேராக சென்று அந்த பேருந்தில் அமர்ந்து கொண்டான் விஷால். அத்தோடு நில்லாமல் அம்மாவுக்கும் இடம் பிடித்து வைத்திருந்தான்!
காவலர் வந்தவுடன் அவரிடம் விவரம் சொன்னேன் "ஏம்மா உன் புள்ள நல்லா விவரமா சமத்தா இருக்கான் நீ தான் இப்படி அவசரப்பட்டு அனைவரையும் கலவரப்படுத்துவதா" என்று சாடினார்.
அதன்பின் விஷால் அம்மா கவலைப்படவில்லை. பிள்ளை கிடைத்த மகிழ்ச்சியில் அவன் விவரமானவன் என்று காவலர் புகழ புன்னகைத்த வண்ணம் வண்டியில் ஏற வண்டி கிளம்பியது
தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
{{comments.comment}}