- பா. பானுமதி
கோடை காலம் என்பதால் அடிக்கடி விஷாலும் குடும்பத்தினரும் மொட்டை மாடிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் அங்கும் இரண்டு வீடுகள் இருந்தது. நாங்கள் மாடியில் குடியிருந்தோம். துணி காய வைப்பதற்காக அங்கு செங்கற்கள் காணப்படும்.
ஒருமுறை இரவு ஒரு செங்கல்லை எடுத்து கீழே தள்ளி விட்டான் விஷால். நல்லவேளை யாருக்கும் எந்த அடியும் படவில்லை. ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும் என்று அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் சொன்னார்கள்.
அன்று இரவு அப்படித்தான் மொட்டை மாடியில் நிறைய துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. காய்ந்த துணிகளை விஷாலின் அம்மா எடுத்துக் கொண்டிருக்க, அப்போது விஷால் அவன் அம்மாவின் சேலையை எடுத்து கீழே போட்டு விட்டான்.

அச்சச்சோ கீழே போய்விட்டதே என்ன ஆனதோ ஏதானதோ என்று மேடையில் இருந்து எட்டிப் பார்க்க,
அந்த சேலை யாரோ ஒருவரின் தலையில் சரியாக மாட்டிக் கொள்ள அதை எடுக்க அவர் திண்டாடிக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் எல்லாம் கூட்டம் கூடி விட அந்த இரவு நேரத்தில் அந்த சேலையில் மாட்டிக் கொண்டவர் யார் என்று விசாரணையில் இறங்கினர். எதிர் வீட்டினர் தங்களுக்கு பக்கத்தில் இருந்த நிலத்தில் ஒரு சிறு பண்ணை அமைத்து ஆடு மாடு கோழி போன்றவை வளர்த்து வந்தனர். அந்தப் பண்ணையில் இருந்து ஆடோ அல்லது கோழியோ திருட வந்த நபர்தான் சரியாக சேலைக்குள் வந்து மாட்டிக் கொண்டான் என்று தெரிய வந்தது.
விஷால் தள்ளிவிட்ட சேலையினால்தான் கோழி திருடன் பிடிபட்டான் என்று அறிந்தவர்கள் விஷாலை பாராட்டி தள்ளி விட்டார்கள். அடுத்த வாரத்தில் அவர்களுடைய தோட்டத்தில் மாங்காய் பறிப்பு நடந்தது. ஒரு கட்டப்பை நிறைய மாம்பழங்களை பறித்துக் கொண்டு வந்து விஷாலுக்கு பரிசாக தந்து விட்டார்கள்.
விஷால் இனி மொட்டை மாடியில் இருந்து நீ என்ன வேண்டுமானாலும் கீழே போட்டு விடு செங்கல் மட்டும் வேணாம்பா மண்ட தப்பாது என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.. அந்த இடமே கலகலப்பானது.
விஷாலும் எதோச்சையாக ஒன்று செய்ய அது அவனுக்கு சாதகமாக முடிந்து விடுகிறது. இப்படியாக ஆடு திருடன் பிடிபட விஷாலுக்கு மாம்பழ பரிசு கிடைத்தது
(சேட்டைகள் தொடரும்)
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}