காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6

Su.tha Arivalagan
Apr 03, 2026,03:32 PM IST

- பா. பானுமதி


ஒருமுறை ஊருக்குச் செல்வதற்கு விஷால் தன் குடும்பத்துடன் விடியற்காலையிலே பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டான் .


இருள் பிரியாத நேரம், இன்னும் பேருந்து வரவில்லை. மற்ற வண்டிகள் வந்த வண்ணம் போன வண்ணம் இருந்தன. எல்லா வண்டிகளையும் கைகாட்டி விஷால் ஏற வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தான் .


விஷாலுக்கு கடையில் ஏதேனும் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்த அவன் அப்பா சென்று விட்டார். அப்போது அங்கு சில கார் ஆட்டோ என பல வண்டிகள் வந்து நின்று தேனீர் அருந்துவது பொருட்களை வாங்குவது மாதிரி இருந்தன. 


விஷால் எப்படியோ அம்மாவின் கைகளிலிருந்து விடுபட்டு, கண்களில் மண்ணைத் தூவி சென்று விட்டான். மறுபடியும் அதே கதை... கண்ணீருடன் கண்மணியை தேடிக் கொண்டிருந்தார்கள் .




பேருந்து நிலையம் முழுக்க தேடியும் விஷால் காணவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் விடியற்காலையில் விஷாலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தப்படியே கண்ணீருடன் ஒரு மணி நேரம் சென்று விட்டது .


அப்போது ஒரு கார் வேகமாக வந்து ஒரு கடையநருகே நிற்க அதிலிருந்து ஒருவர் விஷாலின் கைப்பிடித்து இறங்கி இருக்கிறார் .


காரின் கதவு லேசாக திறந்திருக்க அதில் ஏறி சென்ற விஷால் பின் சீட்டில் அமர்ந்து அப்படியே தூங்கி விட்டான். முன்னாள் அமர்ந்தவரும் கவனிக்காமல் அந்த இருட்டு வேளையில் நேராக சென்று விட திண்டுக்கல்லுக்கு அருகே சென்று ஏதோ பொருட்களை வாங்கி பின் சீட்டில் வைக்கப் போக அப்போது இவன் இருந்திருக்கிறான் .


இவனிடம் எவ்வளவு விசாரித்தும் எந்த விடையும் கிடைக்காமல் பேருந்து நிலையத்தில் மட்டும் தான் கார் சிறிது நேரம் நின்றது எனவே அங்கு செல்வோம் என்று அழைத்து வந்து விட்டார் .


அவரை வணங்கி நன்றி சொல்லி காணாமல் போன கண்மணியை அழைத்துக்கொண்டு ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று வீட்டுக்கு திரும்பி விட்டனர் விஷால் குடும்பத்தினர்.


(விஷாலின் விளயாட்டுகள் தொடரும்)


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)