- பா. பானுமதி
விஷாலும் அவங்களுடைய பெற்றோரும் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்று திரும்பினர். கொட்டாம்பட்டியில் இறங்கி விட்டனர் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து உண்டு .
விடியற்காலை பொழுது 11 மணி நேரம் பயணம் செய்து களைப்புடன் இறங்கியதால் அங்குள்ள தேநீர் கடையில் பால் வாங்க விஷாலின் அப்பா சென்று விட்டார் .
அந்த காலை வேளையிலும் தேநீர் அருந்த பயணம் செய்யும் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது ஒரு கார் வந்து அருகில் நிற்க அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர் தேநீர் அருந்த சென்றனர் .

விஷால் அந்த வண்டியை காட்டி ஏற வேண்டும் ஏற வேண்டும் என்று ஒரs அடம் பிடிக்க இவ்வளவு நேரம் பயணம் செய்தோமா இப்போது தானே இறங்கினோம். சற்று அமைதியாக இரு என்று அவனுடைய அம்மா சமாதானம் கூறிக் கொண்டிருந்தார்.
விஷால் அப்பா பாலை கொண்டு வர அவர்களும் தேனீர் அருந்த சென்றவர்கள் அருந்தி விட்டு வர விஷால் கார் கதவை பிடித்துக் கொண்டு அவர்களுக்கும் ஏற விடாமல் பிடிவாதம் பிடிக்க அதை கண்ட அவர்கள் சரி என்னுடன் வா ஒரு ரவுண்டு சென்று விட்டு வருவோம் என்று அழைத்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அந்த குழந்தை லட்டு மாதிரி இருக்கு அவங்க அம்மா அவ்வளவு அழகா இருக்கா ரெண்டு பேரையும் தூக்கிட்டு போக கார் காரன் வழி பார்க்கிறான் என்று சற்று இங்கிதமில்லாமல் அனைவரின் காது பட சொல்ல... அதைக் கேட்ட அதிர்ந்த விஷாலின் அம்மா, வேண்டாம் நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறினார்.
விஷால் பிடிவாதம் பிடிக்க விஷால் தன்னுடைய அப்பா உடன் வண்டியில் ஏறி ஒரு ரவுண்டு போய் விட்டு வந்து நாங்கள் ஒன்றும் அத்தனை மோசமானவர்கள் அல்ல என்று அவர்கள் பார்வையால் விடை சொல்லிவிட்டு போனார்கள்.
10, 11 மணி நேரம் பயணம் செய்தும் அடங்காத அந்த பயணப்பிரியத்தால் வந்த வினை. அலுப்பும் களைப்பும் பெரியவர்களுக்கு மட்டும் தானா பிள்ளைகளுக்கு இல்லையா!
(தொடரும்)
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
{{comments.comment}}