அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!
- பா.சுமதி சரவணன்
பொள்ளாச்சிக்குப் போற யாருமே மறக்காமல் போகும் இடமாக ஆழியாறு மாறியிருக்கு. அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் ஆழியாறின் அடையாளமாகத்தான் இந்த அறிவுத் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
நம்ம நிறைய கோயில்கள் பார்த்திருப்போம். இந்த கோயில் பாத்தீங்கன்னா அறிவுக்கு திருக்கோயில் அப்படின்னு சொல்லலாம். வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்த விஷயம்தான் இந்த அறிவு திருக்கோயில்.
இது உலகம் முழுதும் பல இடங்களில் இருக்கு. அதுல மிகவும் சிறப்பாக முதல் முதல்ல அறிவுக்கு கோயில் அப்படின்றது ஆழியார்ல ஜோதி நகர்ல அமைக்கப்பட்டதுதான். அந்த இடத்தை போய் பார்த்தாலே மனசுக்கு அவ்வளவு இதமாக இருக்கும். அதை உணர முடியும். பசுமை கொஞ்சும் பல பல அற்புதங்கள் இருக்கும் இடம் இது.
கோயில் என்றால் நம்ம என்ன பொதுவாக எதிர்பார்ப்போம் சிலைகள், சிற்பங்கள் அதெல்லாம் எதிர்பார்ப்போம் இல்லையா ? இங்க சிலைகள் கிடையாது. ஆனால் மலைகள் உண்டு. மகிழ்ச்சி உண்டு, அன்பு உண்டு, ஆனந்தம் உண்டு, அமைதி உண்டு.
இது எல்லாம் எதுல வரணும் மனதில் தானே..... அந்த மனதுக்கு அரிய பயிற்சிகளை கொடுக்கிற கோயில் தான் மனவளக்கலை என்கிற அறிவு திருக்கோயில். இந்தக் கோயில்ல என்ன பண்றாங்க தெரியுமா? நம்மளுடைய மூன்று ஆதாரமான அடிப்படையான விஷயங்களை மேம்படுத்துற பயிற்சிகள் தான் இங்கே இருக்கு.
அது என்ன அப்படின்னா, ஒரு மனிதன் என்றால் அவனுக்கு மனம் இருக்கும், உயிரிருக்கும், உடல் இருக்கும், உடலுக்காக உடற்பயிற்சி, அதுவும் எளிய முறையில் மனதுக்காக தியான பயிற்சிகள், அதுவும் எளிய முறையில் உயிரை வளப்படுத்த மேம்படுத்த சித்தர்கள் கண்ட காயகல்பம் பயிற்சி. மிகவும் எளிய முறையில் இங்கு கற்பிக்கப்படுகிறது.
வாழ்நாள்ல நாம் கண்டிப்பாக போய் பார்த்து ரசித்து இன்பம் காணும் இடமாக இந்த அறிவு திருக்கோயில் அமைந்துள்ளது. நீங்களும் வந்து பாருங்க, உங்களுடைய அமைதியை நீங்கள் இங்கே பெறுவீர்கள். இது நிச்சயம்.
இதை பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம்: https://aliyararivuthirukoil.com/
(கட்டுரையாளர்: Sky.Prof.பா.சுமதி சரவணன்.B.com.MSc.யோகா.NIIT.DYBT, சென்னை)