கர்மாவை கரைக்கும் சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு

Feb 25, 2026,01:23 PM IST

- பக்தித் தென்றல் பாவை.பு


இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளையும் தங்களது தவத்தின் மூலம் அறிந்து பெற்று அனுபவித்து அதை மற்றவர்களும் அனுபவிக்கனும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மற்றவர்களுக்கும்  கற்றுக்கொடுத்தவர்கள் தான் சித்த புருஷர்கள். 


சித்தர்கள் தவம் செய்து செய்து தங்களின் சக்தியை பெருகி ஆன்மாவை இறைவனோடு ஐக்கியம் ஆக்கியவர்கள் அவர்களோடு இரண்டர கலந்தவர்கள். 


சித்(தி)தர்கள்  என்றால் கைகூடுதல், ஆன்மிகத்தில் பரிபூரணம் அடைதல், அதித ஆற்றல் என பொருள்படும். அதாவது தன்னை யார் என்று அறிந்தவர்கள், தெய்வீக ஆற்றலையும் ஞான சக்தியையும் பெற்று அதில் முழுமையடைந்து உலக நலனுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். 




இவர்கள் ஆன்மிகம்,அறிவியல்,யோகா, மருத்துவம், ஜோதிடம், இரசவாதம், வானவியல், சாஸ்திரம்,கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை, வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தை பாடல்களின் மூலம் சூட்சுமமாக சூட்சுமத்தை உணர்த்தும் தன்மையை அறிந்தவர்கள். 


சித்தர்கள் தங்களது உடல், உயிர், ஆன்மா இவை மூன்றும் ஒரே கூட்டுக்குள் அடக்கிய நிலையில் தவம் செய்து ஒரு கட்டத்தில் இவர்களின் ஆத்மா மேலே இறைவனோடு இனைந்து முழுமையான சக்தியை பெற்ற அந்த ஜீவனை அதாவது சித்தரை அவர்களின் சீடர்களால் சமாதி செய்யப்படுவார்கள். அப்போது அவர்களின் உடல், தசைநரம்புகள் அழியுமே தவிர அவர்களின் ஆத்மா பலம் பெற்று அந்த இடத்தில் இருந்துக்கொண்டே இறைவனிடம் தொடர்பை பெற்றுக்கொண்டே இருக்கும். இதன் காரணத்தால் தான் சித்தர்களின் சமாதியில் எப்போதும் ஒரு தெய்வீக ஆற்றல் வெளிப்பட்டுக்கொண்ட இருக்கிறது. 


சித்தர்கள் இறவாநிலையைப் பெற்று ஒளி உடலுடன் வாழ்பவர்கள். துரிய தியான நிலையில் இருப்பவர்கள். 


சாதாரண மாமிட பிறவியான நம்மால் இறைவனின் நேரடியாக தரிசனத்தை பெறுவது என்பது எளிதல்ல, அதனால் இறைவனோடு தங்களை ஐக்கியமாக்கிய சித்தர்களை நம்பிகையோடும்,பக்தியோடும் பிடித்துக்கொண்டு வணங்கினால் ,அவர்கள் தங்களது கைப்பிடித்து இறைவனை காண கூட்டிச் சொல்வார்கள். 


இதன் காரணமாக தான் சித்தர்களை சிக்கெனப்பிடித்துக் கொண்டால் நாம் சிக்கிய கர்மவினையில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள். 


எனவே நாம் சித்தர்களை நமது நட்சத்திரத்தின் படி வழிபட கூடிய சித்தரையோ, அல்லது நமது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சித்தரையோ, அல்லது நமக்கு பிடித்தமான சித்தரையோ யாராவது ஒரு சித்தரைப்பிடித்து அவர்களின் ஜீவசமாதி முன்பு அமர்ந்து நமது மனதை ஒரு நிலைப்படுத்தி நெற்றிக்கண் முன் அந்த சித்தரின் உருவத்தை கொண்டு வந்து தியானம் செய்ய செய்ய நாம் சித்தர்களின் அருளைப் பெறுவதோடு,  இறைவனை நெருங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்கள் தான் இந்த சித்த புருஷர்கள். 


27 நட்சத்திரங்கள் அவை ஒவ்வொன்றுக்கும் உரிய சித்தர்கள் உள்ளார்கள்..  அந்தந்த நட்சத்திரக்காரர்கள் முறையாக தங்களது சித்தரைக் கண்டு கொண்டு வழிப்பட்டு வந்தால் வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பத்தையும் வறுமையையும் கர்ம வினைகளிடம் இருந்தும்  படிப்படியாக நீங்கப்பெறலாம். 


அடுத்த கட்டுரையில்...


27 நட்சத்திரங்களுக்கான சித்தர்களும், அவர்களின் ஜீவ சமாதி முன் நாம் வழிபடும் முறைகளும் குறித்துக் காண்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்