குன்றின் மேல் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த 1008 லிங்கங்கள் கொண்ட சிவஸ்தலம்

Feb 16, 2026,03:52 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சேலம் அரியானூரில் அமைந்துள்ள 1008 சிவலிங்கம் கோவில் ஒரு  குன்றின் மேல் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம் ஆகும். இக்கோவில் சேலம் நகரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் அரியானூரில்,

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபலமான சிவ ஸ்தலமாகும். சேலம் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் ஒன்றான 1008 சிவலிங்கம் கோவில்  அனைவரும் பார்க்க வேண்டிய சிவஸ்தலம் ஆகும்.


சேலம் அரியானூரில் 2010-ம் ஆண்டு விநாயகா மிஷன் குழுமத்தால் இக்கோவில் நிறுவப்பட்டது. இந்த 1008 லிங்கம் திருக்கோவில் கஞ்சமலை அடிவாரத்தில் விநாயகா மிஷன் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.


இந்த சிவாலயத்தில் ஒரு பிரதான லிங்கத்துடன் 1007சிறிய லிங்கங்கள் என மொத்தம் 1008 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு அமைய பெற்றுள்ள பிரதான லிங்கம் நந்தி சிலையுடன் கூடியது.இது மாங்கனி நகரமான சேலம் மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விசேஷ ஸ்தலமாகும்.




சிவபெருமானின் சிவ சஹஸ்ர நாமாவளி பெயர்களின் அடிப்படையில் 1008 லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.


இக்கோவில் ஓம் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் முதல் ஓம் வடிவ கோவில் என்றும் கூறப்படுகிறது. ஓம் வடிவம் இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சின்னம். இது பிரம்மம், விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் குறிக்கிறது.இந்த கோவில் ஓம் சின்னத்தின் மங்களகரமான வடிவில் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்  ஒரு முக்கிய இடமாக விளங்குகிறது.

 

தரிசன நேரம்:


இக்கோவிலில் தரிசன நேரம் காலை 7:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.


இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நேற்று மிகவும் விசேஷமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர். குறிப்பாக வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர்.

 

அமைப்பு:


கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த சிவாலயம் அமைதியான சூழலையும், ராஜராஜேஸ்வரி அம்மன் சன்னதியையும் கொண்டுள்ளது. கஞ்சமலை காடுகளுக்கு அருகில் இருப்பதனால் இது ஒரு சிறந்த ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இங்கு அமையப்பெற்றுள்ள 1008 சிவலிங்கங்கள் சிவபெருமானின் ஒவ்வொரு பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


1008 சிவலிங்க கோவிலில் வழிபாடுகள் செய்ய பல நன்மைகள் கிடைக்கும். சிவபெருமானின் அருள் கிடைக்கப்பெற்று பாவங்கள் நீங்கி,மன அமைதி மற்றும் வளமான வாழ்வு பெற வழிவகுக்கும். இவ்வாறு 1008 சிவலிங்கங்களை ஒரே இடத்தில்  தரிசனம் செய்வதால் ஆயிரம் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சிவ பக்தர்கள் மற்றும் சுற்றுலா பிரியர்கள் ஒரு முறையேனும்  இக்கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வருவது சிறப்பு. அவரவர்களால் இயலும்பொழுது தவறவிடாதீர்கள்.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி பாலசுப்பிரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்