- கவிதா உடையப்பன், சேலம்
அன்பே சிவமே
அருளே சிவமே!
காற்றின் ஒளியே
காலத்தின் சின்னமே!
எங்கும் நீயே
எதிலும் நீயே!
என் உள்ளும் இருப்பாய்
எப் புறமும் இருப்பாய்!

உன்னையே நான் என
உணரச் செய்வாய்
என்னையே எனக்கு காட்டிக் கொடுப்பாய்!
எது செய்யினும் உன்னையே என்னிட வைப்பாய்
எந்த சொல்லிலும் உன்னையே நினைவூட்டுவாய்!
"நீ தான் நான்", என உணர்ந்திடும் பொழுது உறுதி கொண்டிடுதே என் உடலும் மனமும்
நான் தான் யார் என்று கண்டிடும் பொழுது, கலங்காது நெஞ்சமும் நிகழ்வும்!
சலனம் இன்றி செயல்பட உதவிடும் எம் சிவமே
சரணம் என்று உன்னையே பற்றிடும் எம் ஜீவனே!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}