புத்தம் புது பூமி!
- கா.சா. ஷர்மிளா
ஜாதி மதம், பேதமில்லா பூமியாக...
புத்தம் புதிய பூமி வேண்டும்...
யுத்தம் இல்லா பூமி ஆக
அமைதியும் அன்பும் எங்கும் நிலவவேண்டும்..
மானிட சமுதாயம் மகிழ்ச்சியுறவே
மெய்ஞானமும் விஞ்ஞானமும் வளர வேண்டும் ...
அஞ்ஞானம் முளைக்கா புதியதோர் பூமி வேண்டும்...
ஏழை பணக்கார பேதமில்லா...
உயர்வு தாழ்வு சமுதாயம் இல்லா...
அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்...
நல்லவர்கள் நல்லதோர் ஆட்சி செய்திடவே...
நன்மக்கள் புதிய பூமியில் வாழ்ந்திடவே...
புதியதோர் ஆட்சி மலர்ந்திட வேண்டும்....
மதுல்லா புதியதோர் பூமிவேண்டும்...
மாதுவை மதித்து போற்றிடல் வேண்டும்...
காசு காசு என்று அலையா...
காலத்தோடு சேர்ந்து பாசத்தோடு வாழ வேண்டும்...
பல தலைமுறைகள் கண்ட மரங்களை...
சாலைக்காக வெட்டி
பொட்டல் காடாக்கா..
பூத்து குலுங்கும் நிழல் தரும் மரங்களை கொண்டதோர்....
புத்தம் புதிய பூமி வேண்டும்...
காசில்லா அறிவு ஞானம் பெற...
மாசில்லா புதுவுலகம் வேண்டும்...
வஞ்சகம் இல்லா புதியதோர் பூமி வேண்டும்....
ஆதாம் ஏவாள் படைப்பின் போதிருந்த
அழகான பூமி இன்றும் வேண்டும்....
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)