வெயில் வெளுக்க ஆரம்பிச்சிருச்சா.. அப்ப பங்குனி வந்தாச்சு.. ஆனா இது சூப்பர் மாதம்ங்க!
- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 26 ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 15 ஆம் தேதி தமிழ் மாதங்களின் இறுதி மாதமான பங்குனி மாதம் பிறந்துள்ளது.பங்குனி மாதம் தெய்வங்களின் திருமண மாதமாக போற்றப்படுகிறது. இமாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் பங்குனி 'திருமண மாதம்' என்று போற்றப்படுகிறது.
இம்மாதம் வசந்த காலத்தில் உச்சத்தையும், தெய்வத் திருமணங்களையும் குறிக்கின்றது. சிவபெருமான் முருகப்பெருமான் மற்றும் ராமரின் திருமணங்கள் பங்குனியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பங்குனி உத்திரம்,யுகாதி பண்டிகை, ரமலான் பண்டிகை, வசந்த நவராத்திரி,விஜயா ஏகாதசி, ஆம லகீ ஏகாதசி இம்மாதங்களின் முக்கிய விழாக்கள் ஆகும்.
பங்குனி மாதத்தில் வரும் விசேஷ நாட்களை பற்றிய தகவல்களை பார்ப்போம்..
பங்குனி 1 - மார்ச் 15:
பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு இரண்டாம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பங்குனி 2 -மார்ச் 16 :
பிரதோஷம்: சிவாலயங்களில் மாலையில் நந்தி&சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்.
பங்குனி 3 மார்ச் 17:
மாத சிவராத்திரி. சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்.
பங்குனி 4 மார்ச் 18 :
அமாவாசை. முன்னோர் வழிபாடு செய்ய உகந்த நாள்.
பங்குனி 5 மார்ச் 19:
யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு )
வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல் வளர்பிறை நவமி வரை 9 நாட்கள், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமி வரை 15 நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்களாகவும் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை வட இந்தியாவில் மற்றும் தென் இந்தியாவில் சில இடங்களில் உள்ள கோவில்களில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி 7 மார்ச் 21: ரமலான் பண்டிகை.
பங்குனி 13 மார்ச் 27: ஸ்ரீ ராமநவமி.
பங்குனி 15 மார்ச் 29: ஏகாதசி விரதம். பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு "ஆமலகீ ஏகாதசி "என்று பெயர்.
பங்குனி 17 மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி.
பங்குனி 18 ஏப்ரல் 1 : பங்குனி உத்திரம். பௌர்ணமி. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியி
ல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானது.
பங்குனி 20 ஏப்ரல் 14: புனித வெள்ளி.
பங்குனி 30 ஏப்ரல் 13: ஏகாதசி விரதம். பங்குனி மாதம் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு "விஜயா ஏகாதசி "என்று பெயர். 'விஜய' என்றால் வெற்றி என்பது பொருள். இந்நன்னாளில் ஏகாதசி விரதமுறையை பின்பற்ற பக்தர்கள் தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெறலாம்.
பங்குனி மாதத்தில் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்.இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது. அதுபோலவே நம் அனைவர் வாழ்விலும் வசந்த காலம் தொடங்கி நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.